பக்கம்:நற்றிணை 1.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

நற்றிணை தெளிவுரை


கொண்டவளாக, கடத்தற்கு அரிதான சுரநெறியிடத்தேயும் சென்றனள் என்கின்றனரே! இளங்குருத்துப் போலும் அழகியவான தன் வெண்மையான பற்களிடத்தே இளநகையைத் தோற்றுவித்தபடி, மகிழ்ச்சியோடு செல்வதாகவும் கூறுகின்றரே! அவள்தான் எவ்வாறு நடந்து செல்வாளோ? எவ்வாறு அவனோடு கூடி இல்லறம் நடத்துவாளோ?

கருத்து : 'பிள்ளைமைக் குணம் சற்றும் மாறாத என் மகள் புதியவனாகிய இளைஞனின் பேச்சையே வாழ்விற்குப் பற்றுக்கோடாகக்கொண்டு எவ்வாறு சென்றனளோ?' என்பதாம்.

சொற்பொருள் : வயலை – வயலைக் கொடி. ஈற்று ஆ – கன்றையீன்ற பசு. பாவை – பஞ்சாய்ப் பாவை. அவ்வயிறு – அழகிய வயிறு. குறுமகள் – இளமகள். அமர்ப்பு – அமரிய பார்வை. மையல் நோக்கம் – மயங்கிய பார்வை. அணல் – மோவாயின் கீழுள்ள தாடி. காளை – காளை போல்வான், முருந்து – நாணற் குருத்து; மயிலிறகுக் குருத்துமாம்.

விளக்கம் : 'இல்லிடத்து வளர்ந்த வயலைக்கொடியைப் பசு மேய்ந்ததற்கே வயிற்றிலடித்து வருந்திப் புலம்பியவள் என்மகள். அவள் இல்லைந்துறந்து புதியோனின் பின்னர்ச் செல்லும் துணிவினை எவ்வாறு பெற்றனளோ?' எனத் தாய் ஏங்குகின்றாள். இனிய பாலினை ஊட்டவும் உண்ணாது மறுத்துப்போகும் அவள்தான், எவ்வாறு பொறுப்புடன் இல்லறம் பேணுவாளோ?' எனவும் கவலையடைகின்றாள். 'என் செய்வினைக் குறுமகள்' என்பதற்கு, 'என்னுடைய இல்லத்துச் செய்யும் பணிகளையெல்லாம் உடனிருந்து கண்டறிந்த இளமகள்' எனவும் கொள்ளலாம் அதனால் அவள், தன் இல்லறத்தையும் நன்றாகவே நடத்துவாள் என்ற ஒரு சிறு நம்பிக்கையும் தாய்க்குப் பிறக்கின்றது.

180. புன்னை விழுமம்!

பாடியவர் : ......
திணை : மருதம்,
துறை : தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.

[(து–வி.) பரத்தை மயக்கம் தீர்த்த தலைவன் மீண்டும் இல்லிறகு வருகின்றான்; மனைவியின் உறவையும் நாடுகின்றான்: அவளோ சினந்து ஒதுக்குகின்றாள். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/347&oldid=1731827" இலிருந்து மீள்விக்கப்பட்டது