பக்கம்:நற்றிணை 1.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

357


185. யான் நோவேன்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி,
துறை : (1) பாங்கற்குத் தலைவன் சொல்லியது. (2) சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.

[(து–வி.) (1) சுற்றறிந்தானாகிய பாங்கன், தலைவனது களவுறவின் பொருந்தாமைக்குக் காரணமான பலவற்றையும் கூறி, அவ்வுறவைக் கைவிடுமாறும் வற்புறுத்துகின்றான். அவனுக்குத் தான் தலைவிபாற் கொண்டுள்ள காதற்பெருககினை நயமாக உரைத்து, அவளைத் தனக்குச் கூட்டுவிக்குமாறு கேட்கின்றான் தலைவன். (2) தோழிபால் குறையிரத்து நின்ற தலைவனை, அவள் அவனுக்கு உதவுவதற்கு மறுத்துப் போக்கவே, அவன் தானுற்ற காமநோயினை அவளுக்கு இப்படி உணர்த்துகின்றான்.]

ஆனா நோயோடு அழிபடர்க் கலங்கிக்
காமம் கைம்மிகக் கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின் பாணர்
பரிசில் பெற்ற விரியுளை நல்மான்
கவிகுளம்பு பொருத கல்மிசைக் சிறுநெறி 5
இரவலர் மெலியாது ஏறும் பொறையன்
உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவையின்
அகலிலைக் காந்தள் அலங்குகுலைப் பாய்ந்து
பறவை இழைத்த பல்கண் இறாஅல்
தேனுடை நெடுவரை தெய்வம் எழுதிய 10
வினைமாண் பாவை அன்னோள்
கொலைசூழ்ந் தனளால் நோகோ யானே.

பாடிச் செல்லும் மரபையுடையவரான பாணர்கள் விரிந்த புறமயிரை உடையவும் நல்ல இனத்தைச் சார்ந்தவுமான குதிரைகளைத் தமக்குரிய பரிசிலாகப் பெற்றுச் செல்வார்கள். அக்குதிரைகளின் கவிந்த குளம்புகள் பொருதுதலானே தடம்பட்டு விளங்குவது மலைமேலிடத்ததான சிறு நெறியாகும். அந் நெறிக்கண்ணே, இரவன்மாக்கள் உள்ளத்தே மெலிவற்றாராய் ஏறிச் செல்வர். கொல்லிக்கு இறைவனை நாடியே அவர்கள் அங்ஙனம் சென்றுகொண்டிருப்பார்கள். அக் கொல்லி மலையானது சான்றோரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/358&oldid=1706392" இலிருந்து மீள்விக்கப்பட்டது