பக்கம்:நற்றிணை 1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

35


85 மிகப்பெரிதான பழிச்சொல் உண்டாகுமாறு நம்மைப் பிரிந்து சென்றனர். என்றாலும், நம்மை செய்தாராகிய நட்புச் அவர், குறித்த பருவத்தே தவறாது வந்தனராய் நமக்குத் தலையளி செய்வார். ஆதலின், அவர் நீடூழி வாழ்வாராக! கருத்து: 'அவரைப் பழித்து உரையாதேயிரு; அவர் தவறாது வருவர்; அதுவரை ஆற்றியிருப்பேன்' என்பதாம். சொற்பொருள்: தொல் கவின் - பழையதாகிய கவின்; குட்டுவன் - சேரர்களுள் ஒரு குடும்பத்தான். அகப்பா - கழு மலக்கோட்டை. செம்பியன் - சோழன்; கிள்ளிவளவன்; ஞாட்பு - போர். 'இனம் சால் வயக்களிறு என்பதற்கு, ஞால்வாய்க் களிறு எனவும் வேறுபாடம் கொள்வர். துஞ்சாத் துயரம் - தளராத் துயரம். புல்லி - கள்வர் கோமானாகிய புல்லி. விளக்கம் : ஊர் தீப்பட்ட காலை எழுந்த அலரார வாரத்தினுங் காட்டில், பிரிவால் சேரியிடை எழுந்த அலர் பெரிதாயிருந்தது என்கின்றாள். தானுற்ற காமநோயது கொடுமை மிகுதியையும், அதனால் ஊரகத்தெழுந்த பழியது மிகுதியையும் இவ்வாறு கூறுகின்றாள். 'நல்கார் நீத்தனர் ஆயினும், நட்டனர் நல்குவர்" என்று உரைத்தது தனது கற்புமேம்பாட்டினைக் காட்டிக் கூறியதாகும். பாம்பின் இறைச்சி : 'களிறு வாய்ப்பட அஞ்சிய பிடியினது பூசல் மலைப்பிளப்பெல்லாம் சென்று எதிரொலிக் குமாறு போலத், தலைவன் பிரியத் தான்கொண்ட துயர மிகுதியினால் எழுந்த ஊரலர், சேரியிடமெல்லாம் சென்று பரவினும் பரவுக' என்கின்றனள். 15. நாணும் விட்டேம்! பாடியவர் : பாண்டியன் அறிவுடை நம்பி. திணை : வரைவு துறை : நெய்தல். நீட்டித்த வழித் தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது. ((து-வி.) களவிலே தலைவியைக் கூடியின்புற்ற தலைவன், அவளை வரைந்து மணந்து கொள்வதாகக் கூறிப் பிரிந்தான். அவன் காலத்ை தே நீட்டித்துக் கொண்டே போகத் தலைவி பெரிதும் நலிவுற்றாள். ஊரலரும் மிகுதி யாயிற்று. இவற்றைக் கூறித் தலைவனைத் தலைவியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/36&oldid=1627158" இலிருந்து மீள்விக்கப்பட்டது