பக்கம்:நற்றிணை 1.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

நற்றிணை தெளிவுரை


உள்ளுறை : தெறலருங் கடவுளின் சினமும் இன்னிசையால் தணியுமாறு போல, நின்னைப் பற்றி வருத்தும் துயரமும் இன்னிசையால் தணியும்; ஆதலின் யாம் யாழிசைப்போம்; பிரிவுத் துயரைச் சற்றே மறப்போம் வருகவென அழைத்ததுமாம்.

190. நகைக்கு மகிழ்ந்தோய்!

பாடியவர் :....
திணை : குறிஞ்சி.
துறை : (1) பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; (2) அல்ல குறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லிய தூஉம் ஆம். (3) இடைச்சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.

[(து–வி.) (1) தோழிபாற் சென்று தலைவியைத் தனக்கு இசைவித்துக் கூட்டுவிக்குமாறு குறையிரந்து நின்று, அவளால் ஒதுக்கப்பட்ட ஒரு தலைவன், இவ்வாறு தன் நெஞ்சிற்குச் சொல்லுகின்றனன்; (2) இரவுக்குறியிடைத் தலைவியை நாடிச்சென்று காணானாக மீள்பவன் ஒருவன் தன் நெஞ்சிற்கு இவ்வாறாக உரைக்கின்றான்; (3) வினைவயிற் சென்ற ஒரு தலைவன் இடைவழியில் தலைவிபாற் சென்ற தன் நெஞ்சை நோக்கி இவ்வாறு கூறுகின்றனன். இம் மூன்று துறைகட்கும் பொருந்துமாறு பொருள் அமைந்த செய்யுள் இது.]

நோஇனி வாழிய நெஞ்சே! மேவார்
ஆரரண் கடந்த மாரி வண்மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேங்கமழ் விரிதார் இயல்தேர் அழிசி
வண்டுமூசு நெய்தல் நெல்லிடை மலரும் 5
அரியலம் கழனி ஆர்க்காடு அன்ன.
காமர் பணைத்தோள் நலம்வீறு எய்திய
வலைமான் மழைக்கண் குறுமகள்
சில்மொழித் துவர்வாய் நகைக்குமகிழ்ந் தோயே!

நெஞ்சமே! தன்னுடன் பொருந்தாத பகைவரது கடத்தற்கரிய அரணங்களை எவ்லாம் வென்று கைக் கொண்டவன்; மாரிபோன்ற கை வண்மையினை உடையவன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/369&oldid=1706909" இலிருந்து மீள்விக்கப்பட்டது