பக்கம்:நற்றிணை 1.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398

நற்றிணை தெளிவுரை


பேரார்வத்தையும் இவர் உருக்கமாகக் கூறுவர் (அகம் 328). பெருந்தேவனாரினும் வேறுபடுத்திக் காட்டுதல் கருதி. இவரை இளந்தேவனார் என்றன போலும்!

இளம்புல்லூர்க் காவிதி 89

காவிதிப் பட்டத்தினர்; இதனால் உழுவித்து உண்ணும் வேளாளப் பெருங்குடியினராக இவரைக் கொள்ளலாம். இவரூர் 'புல்லூர்' என்பதாகும். இவர் பாடியவாகக் காணப்படுவது இந் நற்றிணைச் செய்யுள் மட்டுமேயாகும். வாடைக் காற்றது கொடுமையைப் பற்றிய உவமைத் திறம் மிகமிகச் சுவையுடையது ஆகும். 'புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்துப் பரும யானை அயாவுயிர்த் தாங்கு' வாடைக்காற்று வருத்தம் மிகுக்க வருகின்றதாம்.

இளம்போதியார் 72

'போதியார்' என்றமை இவரைப் புத்த முனிவருள் ஒருவரெனக் காட்டுவதாகும்: 'இளம்' என்றது இவரது பருவத்தைக் குறித்துக் கூறப்பட்டதும் ஆகலாம். இவர் பாடியவாகக் கிடைத்துள்ளது இச் செய்யுள் ஒன்று மட்டுமேயாகும். நெய்தற்றிணையைச் சார்ந்த இதன்கண், 'பேணும் பேணார் பெரியோர் என்பது நாணுத்தக்கன்றது காணுங் காலை' எனப் பெரியோரது வாய்மை பேணும் கடப்பாட்டைச் சுட்டித் தோழி கூற்றாக இவர் கூறியுள்ளமையும், களவுறவுக்குத் தலைவி அஞ்சுகின்றாளெனத் தோழி கூறுவதாக உரைக்குந் திறமும் சிறப்புடைய தாகும்.

இளவேட்டனார் 33, 157

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்பாரும் இவரும் ஒருவரேயாவர்; இருவரும் வேறானவர் என்பாரும் உளர் மதுரைக்கண்ணிருந்து அறுவை வாணிகத்தால் வாழ்ந்து வந்தாரான இவர் சிறந்த தமிழ்ச் சான்றோராகவும் விளங்கினார். அகம். 56, 124, 230, 254, 272, 302; குறுந் 185; நற்.33. 157, 221, 344; புறம். 329 என்பன இவரியற்றிய செய்யுட்களாகக் காணப்படுவனவாகும். 'புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மையுடைய தலைவர்கள் இவர் காலத்து வாழ்ந்தனர் (புறும் 329). இச் செய்யுட்கள் இரண்டும் பாலைத்திணையைச் சார்ந்தவை பிரிவுத் துயரத்தால் வருந்தும் தலைவியின் நிலையையும், தலைவனின் மன நிலையையும் இச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/399&oldid=1708236" இலிருந்து மீள்விக்கப்பட்டது