பக்கம்:நற்றிணை 1.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை அமுதச் செந்தமிழ் மொழியினை அன்னையினும் மேலாகப் பேணிக் காக்கவேண்டும் என்னும் ஆர்வம், நம் முன்னோர்க்கு நிரம்ப இருந்தது. இந்த ஆர்வத்தோடு இதற்கான செவ்விய முயற்சிகளை யும் நிறைவாகச் செய்தார்கள் அவர்கள். இந்த வகையில் அமைந்தனவே தமிழறிஞர் அவைகளான சங்கங்களும், அக் சங்கங்களால் ஆய்ந்து தொகுக்கப் பெற்றவான சங்கத்தமிழ்ச் செல்வங்களும் ஆகும். பல இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தி லிருந்தது கடைச்சங்கம். அத் தமிழ்ச்சான்றோர் அவையில் ட்பமாக ஆராயப்பெற்றுத் தொகுக்கப்பெற்றன நூல்கள். அவற்றுள் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் மிகமிகச் சிறந்தனவாகும். அக்காலத்தினும், அதற்கும் முற்பட்ட காலத்தினும் வாழ்ந்த தமிழ் மக்களின் செறிவான வாழ்வியல் நுட்பங்களையும், வரலாற்றுச் செய்திகளையும், அறிவுச் செழுமையினையும், கலையுணர்வையும் அவை விளக்கமாக உரைத்துக்காட்டுகின்றன. 'அந்தப் பெருமித ழ்வினரின் வழிவந்தோர் நாம்' என்னும் பெருமையை நமக்கும் அவை வழங்குகின்றன. வா சில எட்டுத்தொகையுள் ஒன்றாகத் திகழ்வது இந் நற்றிணை யாகும். நூல்களைத் தொகுத்த சான்றோர்கள் மரபுகளை வகுத்துக்கொண்டுதான் தொகுத்திருக்கின்றனர். அகப்பொருள் சார்ந்த நெடுந்தொகை நற்றிணை குறுந் தொகை என்னும் மூன்று தொகைநூல்களும், செய்யுட்களின் வளமையோடு அடியளவையும் கருத்திற்கொண்டு தொகுக்கப் பெற்றுள்ளன: ஒவ்வொன்றும் நானூறு செய்யுட்களையும் கொண்டுள்ளன. இவற்றுள், நற்றிணை ஒன்பது அடிச் சிறுமையையும் பன்னிரண்டடிப் பெருமையையும் கொண்ட செய்யுட்களின் தொகுப்பாகும். குறிஞ்சிக்கு 132; பாலைக்கு 106; நெய்தலுக்கு 101; மருதத்துக்கு 32; முல்லைக்கு 29 என்ற அளவிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/4&oldid=1626499" இலிருந்து மீள்விக்கப்பட்டது