பக்கம்:நற்றிணை 1.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

403


அதனை அறத்தொடு பட்டதே எனக்கொண்ட தாய், 'வழுவிலள் அம்ம தானே!' என்றுரைத்தாளாயினும், அவளைப் பிரிந்ததற்கு இரங்கி மருளுகின்றாளெனக் காட்டுகின்றனர் இவர்.

கண்ணன் புல்லனார் 159

இவர் கருவூரினர்; அதனாற் கருவூர்க் கண்ணம்புல்லனார் எனவும் குறிக்கப் பெறுவர். அகநானூற்று 63ஆம் செய்யுளைச் செய்தவரும் இவரே. தலைவியின் ஆற்றாமையினையும் உலகியலையும் எடுத்துக்கூறித் தலைவியை வரைந்து கொள்ளுமாறு வேண்டும் தோழி கூற்றாக அமைந்த செய்யுள் இதுவாகும். 'செழுநகர்ச் செலீஇய எழு'. எனின் அவளும் ஒல்லாள்: யாமும் ஒழியென வல்லல் ஆயினம்' எனக் கூறும் தோழியின் சொற்கள் அவர்களது உளம் நிரம்பிய பேரன்பைக் காட்டுவனவாகும்.

கணக்காயனார் 29

இச் செய்யுளை மதுரைக் கணக்காயனார் செய்ததெனவும். கணக்காயன் தத்தனார் செய்ததெனவும் இருவாறாகக் கொள்வாரும் உளா. தொழிலாற் பெயர் பெற்றவர் இவர். கணக்குக் கற்பிக்கும் ஆசிரியத் தொழிலோர் கணக்காயர் எனப் பெற்றனர். தலைவியின் துயராற்றாமையை உணர்ந்த தோழி வரைவு கடாயதாக அமைந்த இச் செய்யுளுள், இவர் 'முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை'யைச் சிறப்பித்துள்ளனர்.

கதப்பிள்ளையார் 135

கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் வேறு; இவர் வேறு என்பர். சாத்தனாரின் தந்தையாராகவும் இவரைக் கொள்வார்கள். குறுந்தொகையுள் 64, 265, 380 ஆகிய மூன்று செய்யுட்களும், இச்செய்யுளும் இவர் பெயரால் வழங்குவனவாம். நாஞ்சில் வள்ளுவனைப் புறநானூற்று 380 ஆம் செய்யுளாற் பாடியவரும் இவரே. நெய்தற்றிணையைச் சார்ந்த இச் செய்யுளுள் நெய்தனிலத்தின் தன்மையை இவர் அழகுறக் காட்சிப்படுத்திக் காட்டுகின்றனர்.

கபிலர் 1, 13, 32, 59, 65, 77

பாண்டிய நாட்டுத் திருவாதவூரிற் பிறந்தாரான இப் பெரும்புலவரது வரலாறு மிகப் பரந்த ஒன்றாகும். பாரியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/404&oldid=1711061" இலிருந்து மீள்விக்கப்பட்டது