பக்கம்:நற்றிணை 1.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

405


செய்யுளையும் இவர் பாடியுள்ளனர். பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயதாக அமைந்த இச்செய்யுளால் இவரது தமிழ்ப் புலமையினை நாம் அறிந்து இன்புறலாம்.

காஞ்சிப் புலவனார் 120, 123,

மாங்குடி மருதனார் என்னும் தமிழ்ச் சான்றோர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்மீது மதுரைக் காஞ்சி பாடியதனால், 'காஞ்சிப் புலவனார்' எனவும் பெயர் பெறுவாராயினர். வேளாண் மரபினரான இவரை மாங்குடிகிழார் எனவும் கூறுவதுண்டு. இவருடைய மதுரைக் காஞ்சி சொற்றொரும் இன்பம் பயக்கும் செறிவுடையதாகும். ஐம்பாற்றிணையும் கவினோடு அமையைக் காஞ்சியை வலியுறுத்தும் செய்யுளை இவர் ஆக்கியுள்ளனர். மதுரையின் வளத்தையும் மதுரைக்கண் வாழ்ந்த மக்களது வாழ்வுச் சிறப்பையும் அதனுட் காணலாம். புறநானூற்றுள்ளும் இவர் பாடியுள்ள செய்யுட்கள் பொருட்செறிவுடன் விளங்குகின்றன். தலைவி அட்டிலாக்கி வருகின்ற அரிய காட்சியையும், நெய்தனிலத்து இளமகளிர் அலவனாட்டி யாடும் ஆடல் அழகையும் இச்செய்யுட்களாற் காணலாம்.

கீரங் கீரனார் 78

கீரனூர்ப் புலவராதலின் கீரங்கீரனார் எனப் பெற்றனர் போலும்! தன் தேர்மணியினது ஒலியைப் பலரும் கேட்டறியுமாறு வெளிப்படையாகத் தலைவன் வருகின்றானாதலின், அவன் நின்னை வரைதற்கே வருபவனாதல் வேண்டுமெனத் தோழி தலைவிபாற் சென்று கூறுவதாக இச் செய்யுளுள் இவர் அமைத்துள்ளனர். கீரங்குடியினர் எனவும் கருதுவர்.

கீரத்தனார் 27, 41

குடவாயிற் கீரத்தனார் எனவும் இவர் பெயர் வழங்கும். குடவாயில் தஞ்சை மாவட்டத்து நன்னிலத்தைச் சார்ந்துள்ள ஒரு பேரூர். கழுமலப் பெரும்போரை அகநானூற்று 44ஆம் செய்யுளுள் போற்றிக் கூறுகின்றார் இவர் புறநானூற்றுள் (242) ஒல்லையூர்கிழான்பெருஞ்சாத்தனைப் பாடியுள்ளனர். அன்னையின் சொற்களைத் தலைவிக்குக் கூறி ஆராயும் நயத்தையும் (21), வினைமுற்றி மீள்வானொரு தலைவன் தேர்ப்பாகற்குத் தன்னை எதிர்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/406&oldid=1711063" இலிருந்து மீள்விக்கப்பட்டது