பக்கம்:நற்றிணை 1.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

407


குறிக்கும்; கடலிடைக் கலங்கவிழ்தல் பற்றிய உவமையொன்றை இச்செய்யுளுட் கூறியதுகொண்டு இவரைக் கடல் வாணிகருள் ஒருவரெனவும் கொள்வார்கள். குறுந்தொகையுள் சூலிக்குக் கடன்பூணல்; கைந்நூல் யாத்தும் புள்ளோர்ந்தும் நற்பொழுது காண்டல்; விரிச்சியோர்தல் முதலான பல பண்டை வழக்கங்களை இவர் எடுத்தாண்டுள்ளமை காணலாம் (218). தலைவனது பரத்தமையைப் பற்றி உரைக்கும் இச் செய்யுள் இவரது நுட்பமான புலமைத் திறத்தைக் காட்டுவதாகும்.

கோட்டம் பலவனார் 95

இவரைக் கொட்டம்பலவனார் எனவும் உரைப்பர். 'கோட்டம்பலம்' என்பது ஓரூர்; அவ்வூரினர் இவராவர். 'கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் மாக்கோதை' எனச் சேரமான்களுள் ஒருவனைக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வூரின் உண்மை இதனாலும் அறியப்படும். கழைக் கூத்தாடும் ஆடன் மகளிர் அக்காலத்தும் தமிழகத்திருந்தனர் என்னும் உண்மையும் இச்செய்யுளால் அறியப்படும். 'கொடிச்சி கையகத்ததுவே பிறர் விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே' எனத் தலைவனொருவன் தான் கொண்ட காதலைத் தன் பாங்கனுக்கு உரைக்குந் திறம் இன்புறற்பாலது ஆகும்.

கோக்குள முற்றனார் 96

இவர் 'குளமுற்றம்' என்னும் ஊரினராவர். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப் புறநானூற்றுள் வருதலால் இவ்வூரின் உண்மை அறியப்படும். 'கோ' என்றது தலைமைபற்றியமைந்த அடையாகும். இவரது செய்யுட்கள் இதுவும் குறுந்தொகை 98 ஆம் செய்யுளும் ஆகும். 'உள்ளுதோ றுள்ளுதோ றுருகிப் பைஇப் பையப் பசந்தனை பசப்பே' எனவரும் சொற்கள் தலைவியரின் நெஞ்சத் தகைமையை நன்கு காட்டுவனவாம்.

கோண்மா நெடுங்கோட்டனார் 40

'கோண்மா' போலும் ஆற்றலும், 'நெடுங்கோட்டன்' என்னும் பெயருங்கொண்டவர் இவராவர். இவரது செய்யுளாகக் காணப்பெறுவது இஃது ஒன்றே. 'நள்ளென் கங்குற்கள்வன்போல அகன்றுறை பூரனும் வந்தனன்' எனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/408&oldid=1711065" இலிருந்து மீள்விக்கப்பட்டது