பக்கம்:நற்றிணை 1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

41


நம்மை மறந்து பிறரை நாடியவனாக, நம்மைக் கைவிட்ட னனே' எனக் கூறியவளாக இரங்குகின்றனள். மேற்கோள்: களவு அறியப்பட்ட இடத்துத் தலைவிக்குச் சொல் நிகழ்ந்ததற்கு இச் செய்யுளை நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டுவர் (தொல். பொருள். 111 உரை.) 18. படர் அகல வருவர்! பாடியவர் : பொய்கையார். திணை : பாலை. துறை: பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத் யது. சிறப்பு : கணைக்கால் இரும்பொறையது போர் வென்றி. [(து-வி.) பொருளைத் தேடி வருதலின் பொருட்டாகப் பிரிந்துசென்ற தலைவனின் நினைவினாலே, தலைவி பெரிதும் வாடி மெலிவுற்றனள். அந்த மெலிவைப் போக்குதற்குக் கருதும் அவளது தோழி, தலைவனது சொன்ன சொற் பிழை யாத மாண்பைக் காட்டி இவ்வாறு கூறுகின்றாள்.] . பருவரல் நெஞ்சமொடு பல்படர் அகல வருவர் வாழி தோழி; மூவன் முழுவலி முள்எயிறு அழுத்திய கதவின், கானல் அம் தொண்டிப் பொருநன், வென்வேல் தெறல் அருந் தானைப் பொறையன் பாசறை நெஞ்சம் நடுக்குறூம் துஞ்சா மறவர் திரைதபு கடலின் இனிதுகண் படுப்பக் கடா அம் கழீஇய கதன் அடங்கு யானைத் தடா அநிலை ஒருகோட்டன்ன ஒன்றிலங்கு அருவிய குன்றிறந் தோரே. தோழீ! நீ நெடிது வாழ்வாயாக! 'மூவன்" என்பானின் நிரம்பிய வலிமையினையுடைய முட்போன்ற பற்களைப் பறித்துக் கொணர்ந்து அழுத்திவைத்த கதவினையுடையது. கடற்கரைச் சோலைக்கண்ணதான தொண்டிப் பட்டினம். அதற்குரிய தலைவனாகத் திகழ்பவன், வெற்றி வேலினையும், பகைவரால் வெல்லுதற்கு அரிதான படைப் பெருக்கினையும் உடையவனாகிய சேரமான். அவனுடைய பாசறைக் கண்ணும் வீரர்கள் யாவரும் நெஞ்சம் நடுக்கங்கொள்ள உறக்கங் கொள்ளாதவராகக் கலங்கியிருந்தனர். அவர் அனைவரும், அலையோய்ந்த கடலினைப்போல் இனிதாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/42&oldid=1627164" இலிருந்து மீள்விக்கப்பட்டது