பக்கம்:நற்றிணை 1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

நற்றிணை தெளிவுரை


அறிந்தனை சென்மே' ஏன்றது, தலைவியின் கற்புப் பாங்கி னைக் கூறிய தாகும். உள்ளுறை : 'தாழையது அரும்பு முதிர்ந்து வேறுபடத் தோன்றி விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப' என்றது. அவ்வா D தலைவியும் தன்னில்லத்திலிருந்து வேறுபடும் நிலையினளாக, நின்னோடு மணம் பெற்று வாழும் சிறப் பினை எய்தல் வேண்டும்' என்பதாம்.. மேற்கோள்: தவைவன் பிரியக் கருதியவிடத்துத் தோழிக்குச் சொல் நிகழ்ந்ததற்கு இதனை மேற்கோளாக நச்சினார்க்கினியர் கொள்வர்-(தொல். பொரு. 114 உரை). 0. வாழிய மடந்தை ! பாடியவர் : ஓரம்போகியார். திணை : மருதம். துறை : (1) பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன், 'யாரை யும் அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது: (2) வாயி லாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம். ((து - வி.) (1) பரத்தை உறவினால் தலைவியை மறந்து பிரிந்துறைந்த தலைவன், மீளவும் தலைவிபால் வருகின் றான். அவள், அவன் செயலைக் கூறிப் பழிக்க, அவன் 'யாரையும் அறியேன்' எனக் கூறியவனாக, அவளது சினத் தைத் தணிவிக்க முயலுகின்றான். அப்போது தலைவி, அவனுக்குச் சொல்வதாக அமைந்தது. (2) தலைவளின் பரத்தமையால் ஊடிச் சினந்திருந்த தலைவியின் ஊடலை நீக்கி, அவனோடு மீண்டும் சேர்க்கக் கருதிய தோழி, தலைவி யிடத்தே சென்று சொல்வது.) ஐய! குறுமகட் கண்டிகும்; வைகி, மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த் தேம்பாய் மரா அம் கமழும் கூந்தல் துளங்கியல் அசைவரக் கலிங்கம் துயல்வரச் செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகிற் பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச் சென்றனள் - வாழிய, மடந்தை!-- நுண்பல் சுணங்கணி வுற்ற விளங்கு பூணள் - மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழைப் பழம்பிணி வைகிய தோள் இணைக் குழைந்த கோதை கொடிமுயங் கலளே. 5 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/45&oldid=1627167" இலிருந்து மீள்விக்கப்பட்டது