பக்கம்:நற்றிணை 1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நற்றிணை தெளிவுரை [(து-வி.) வரைந்து கொள்வேன்' எனக் கூறிப்பிரிந்த தலைவன், குறித்த காலத்து மீண்டும் வாராமையினாலே. தலைவி பெரிதும் வாட்டமுற்றிருந்தனள். அவன் சின்னாட் சென்று, வரைந்து வந்தானாதலைக் கண்ட தோழி, தலைவி யிடம் சென்று இவ்வாறு அவன் வரவைக் கூறுகின்றனள்.) கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன் திரை அணற் கொடுங்கவுள் நிறைய முக்கி, வான்பெயல் நனைந்த புறத்த, நோன்பியர் கைஊண் இருக்கையின் தோன்றும் நாடன் வந்தனன்; வாழி-தோழி!- உலகம் கயம்கண் அற்ற பைது அறு காலைப் பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே. 5 10 ே தாழி! மலைப்பக்கத்திலேயுள்ள பரிய தினைப் பயிரினைக் குன்றத்துக் கொடிச்சியர்கள் காத்திருப்பர். அவ்விடத்தே முற்படப் பறிந்து முற்றிய பெரிதான கதிரொன்றை, ஒரு மந்தியானது வந்து கவர்ந்துகொண்டது. பாயும் தொழிலன்றிப் பிறவற்றைக் கல்லாத தன் கடுவ னோடு, அது நல்ல மலையின் மீதும் சென்று ஏறிக்கொண்டது. தன் உள்ளங்கை நிறையுமளவுக்குத் தினையைக் ஈயக்கித் தன்னுடைய திரைத்த அணலையுடைய வளைந்த கவுள் நிறையுமாறு, அது தன் வாயிலிட்டுக் கொண்டது அவ் வேளை வான்பெயலைத் தொடங்க, அதனாலே நனைந்த புறத்தைக் கொண்டதாய், அது அதன்பின் குந்தியபடியே அமர்ந்திருந்தது. நோன்புடையோர். தம் கையிடத்தே உணவைப்பெற்று உண்ணுதற்குக் குந்தி இருந்தாற்போல். அதுவும் அவ்வேளை தோன்றா நிற்கும். அத்தகைய நாடனாகிய நம் தலைவனும், இவ்வேளையிலே நம்பால் வந்தனன். உலகத்துக் குளங்கள் எல்லாம் நீர் வற்றிப் போனதனால் ஈரமற்றுப் போயிருந்த கோடைக் காலத்திலே. சூலோடும் வாடிப்போயிருந்த நெற்பயிருக்கு, நள்ளென்னும் ஒலியைக் கொண்டதான இரவின் நடுயாமத்திலே கோடை மழையானது பெய்தாற்போல. நம் தலைவனும் வெம்மை தீர்க்க நம்பால் வந்தனன். அவன் வாழ்வானாக! நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/49&oldid=1626548" இலிருந்து மீள்விக்கப்பட்டது