பக்கம்:நற்றிணை 1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

59


கடன் என்பதையும் உளங்கொண்டாளாய் ஆற்றியிருப்பள் என்பதாம்.

குறைநயப்பெனத் துறையமைதி கொள்ளின், செய்யுள் குறிஞ்சித் திணைக்கு உரியதாகக் கொள்ளப்படும். அப்போது 'தனக்குத் தலைவனொருவன் தலையளி செய்து தன் உள்ளத் தைக் கவர்ந்து போயினான்' எனத் தோழி படைத்துக் கூறின வளாய்த், தலைவியைத் தலைவன் நாடினதையும், அவள் அவனை ஏற்றலே சால்பென்பதையும் குறிப்பாகப் புலப்படுத் தினளாகக் கொள்க.

மேற்கோள் : 'அலமரல் பெருகிய காமத்தின் மிகுதியின் கண்ணும் தலைவிக்குக் கூற்று நிகழும்' என. இச்செய்யுளைத் தலைவி கூற்றுக்கு மேற்கோளாகக் காட்டுவர் இளம்பூரண னார் (தொல். பொருள். சூ. 145, உரை). இவ்வாறு கொள்வதாயின். தலைவனது பிரிவினாலே காமநோய் மிகுதியாகத் தன்னைப்பற்றி வருத்த, அதனால் பெரிதும் நலிந்த தலைவியானவள், தன் தோழியிடத்தே, தன்னைத் தலைவன் கைவிட்டமையை இவ்வாறு கூறினளாகக்கொள்க. 29. யாங்கு வல்லுநள்?

பாடியவர்: பூதனார். திணை : பாலை. துறை: மகட் போக்கிய தாய் சொல்லியது.

மகளது

[(து .வி.) 'தலைவனோடு தலைவி உடன்போக்கிலே வீட்டை நீத்துப்போயினாள்' எனக்கேட்ட நற்றாய், அஃது அறத்தொடு பட்டதென உணரினும், தன் மென்மைக்கு இரங்கி ஆற்றாளாக இவ்வாறு கூறுகின்றனள் ] நின்ற வேனில் உலர்ந்த காந்தள்

அழலவிர் நீள் இடை, நிழலிடம் பெறா அது ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய, புலிபார்த்து உறையும் புல்லதர்ச் சிறுநெறி யாங்குவல் லுநள்கொல் தானே -யான், 'தன் வனைந்துஏந்து இளமுலை நோவகொல்!' என

5

நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான்தன் பேர் அமர் மழைக்கண் ஈரிய கலுழ

வெய்ய உயிர்க்கும் சாயல்

மைஈர் ஓதி பெருமடத் தகையே?

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/60&oldid=1627182" இலிருந்து மீள்விக்கப்பட்டது