பக்கம்:நற்றிணை 1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

61


காக்கும் பெருங் காதலனாவான் என்பதனையும், மாலைப் போதிலே வழிச்செல்லாது அவளுடன் பாதுகாவலான இடத் திலே தங்கிச் செல்வான் என்பதனையும் கருதிச் சொன்னாள் எனக் கொள்க.

(2) ஈன்று கான் மடிந்த பிணவு' என்றது. அவ்வாறே தன் மகளும் தலைவனுடன் மணந்துகூடி மக்களைப் பெற்றுச் சிறப்பாள் என்பதை நினைந்து கூறியதாம்.

30. யாது

யாது செய்வேன்? :

பாடியவர் : கொற்றனார். திணை : மருதம். துறை; பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தோழி சொல்லியது.

( (து-வி.) பரத்தையருடனே உறவுபூண்டிருந்த தலைவன்,மீண்டும் தன் இல்லத்திற்கு வருகின்றான். தோழி, தலைவி ஊடியிருப்பதைக் கூற, அவன், 'யாரையும் அறியேன் என அதனை மறுக்கின்றான். அவனுக்குத் தோழி சொல்வ தாக அமைந்தது இச் செய்யுள்.]

கண்டனென் மகிழ்ந! கண்டுஎவன் செய்கோ? பாணன் கையது பண்புடைச் சீறியாழ் யாணர் வண்டின் இம்மென இமிரும்

ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கிநின்

மார்புதலைக் கொண்ட மாண்இழை மகளிர் கவல் ஏமுற்ற வெய்துவீழ் அரிப்பனி கால் ஏமுற்ற பைதரு காலைக்

கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன்வீழ்பு பலர்கொள் பலகை போல

வாங்க வாங்கநின்று ஊங்கு அஞர் நிலையே!

5

10

தலைவனே! நின்னுடைய பாணனின் கையிடத்தாக விளங்குவது பண்பமைந்த சிறிய யாழ் ஆகும். அதுதான்

அழகிய வண்டினைப்போல இம்மென்னும் ஒலியோடே

இசை முழக்கும். அத்தகையதும், நீ எழுந்து வருகின்றது மான தெருவிலே, நீ எதிர்ப்படுதலை நோக்கியபடியே, நின்னுடைய மார்பினை முன்பு தமக்கு உரிமையெனப் பற்றிக் கொண்டிருந்தவரான, மாட்சிமைப்பட்ட இழைகளை அணிந் தோரான பரத்தையர் பலரும் காத்திருந்தனர். பெருங் காற்று வீசிச் சுழற்றுதலால் துன்புற்ற காலத்துக் கடலிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/62&oldid=1627184" இலிருந்து மீள்விக்கப்பட்டது