பக்கம்:நற்றிணை 1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

நற்றிணை தெளிவுரை


கருத்து : 'அவனைப்


பிரிந்ததனாவே

எல்லாம்

வெறுத்ததடீ: அவன் வருவானென்ற நம்பிக்கையும் அழிந்ததடீ' என்பதாம்.

ஒரு

சொற்பொருள் : வெண் காக்கை - காக்கையுள் வகை; நீர்க்காக்கை சுடற்காக்கை என்பதும் இது. துணிய தெளிய. பயிரிடூஉ - அழைத்து. புலம்பு - வருத்தம். கால் காற்று. பண்ணியம் பண்ணியம் - பண்டங்கள். கடுஞ்சூல் - முதிர்ந்த சூல். சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன்.

விளக்கம்: முன்னர்க் காக்கை இறாலைப் பிடித்துத் தன் பேடையை அழைத்து அதற்கு ஊட்டுதலைக் கண்டு, தனக்குத் தலைவன் செய்யும் தண்ணளியின் நினைவாலே இன்புற்றவள் தலைவி. அவள். இப்போது, தலைவன் தன்னை மறந்தமையினாலே வந்துற்ற நோயின் மிகுதி யினாலே, அக் காட்சியைக் கண்டதும், தன்பால் அன்பற்ற அவனை நினைந்து பெரிதும் துன்புற்றனள் என்று கொள்க. 'ஆனாது பல்வேறு நாட்டில்' என்றதனால், பாண்டியர் பல்வேறு கடல் கடந்த நாடுகளிடத்தும் அரசியல் கலாசாரத் தொடர்பும் வாணிக உறவும் பெற்றிருந்தனர் என்பதும் விளங்கும்.

உள்ளுறை : 'குருகு' கடற்கரையிடத்தே வாழ்வதாயி னும் தான் கொண்ட சூலின் முதிர்ச்சி காரணமாகத் தளர்ந் தமையினால், அலையோசைக்கு வெருவியதுபோலத், தலைவியும் தன் பிறந்த வீட்டிலேயே இருந்தும், தன் களவுறவின் தன்மையினாலே. அன்னையின் பேச்சைக் கேட்குந்தோறும் பெரிதும் பெரிதும் அஞ்சுவாளாயினாள் என்று

கொள்க.

இறைச்சி : இறாமீனைப்பற்றிய காக்கையும் அதனைத் தான் உண்ணாதாய்த் தன் அன்புப் பேடையை அழைத்து ஊட்டுகின்ற துறையை உடையவனாயிருந்தும். தலைவன் தன் அன்புறு காதலியான தன்னை மறந்தவனாய்த் தன் வினைகளிலேயே மனஞ்செல்வான் ஆயினனே! இந்த என்னையோ?' என நொந்து புலம்புகின்றாள் தலைவி எனக் கொள்க.

3. மறுப்பதற்கு அரியது! : கபிலர். திணை : குறிஞ்சி. பாடியவர் தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது.

துறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/65&oldid=1627187" இலிருந்து மீள்விக்கப்பட்டது