பக்கம்:நற்றிணை 1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

67


[(து.வி.) தலைமகன். வினை முடித்தலிற்


காலம்

நீட்டியானாக விரைவிலே மீண்டும் வருதலைக் கருதிய தோழி, அவன்பாற் சென்று, அவனைப் பிரிந்து வாழாத தலைவியது நிலையைக் கூறி, விரைந்து மீள்தல் வேண்டும் என்பதனை உணர்த்துகின்றாள்.]

'படுசுடர் அடைந்த பகுவாய் நெடுவரை முரம்புசேர் சிறுகுடிப் பரந்த மாலை புலம்புகூட் டுண்ணும் புல்லென் மன்றத்துக் கல்லுடைப் படுவில் கலுழி தந்து

நிறைபெய லறியாக் குறைத்தூண் அல்லில் துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர் அதர்பார்த் தல்கும் அஞ்சுவரு நெறியிடை இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல் வலலுவம் கொல்லோ, மெல்லியம் நாம்?" என விம்முறு கிளவியள் என்முகம் நோக்கி, நல்லக வனமுலைக் கரைசேர்பு

மல்குபுனல் பரந்த மலர் ஏர் கண்ணே.

5

10

"பிளவுபட்ட நெடிய மலைச்சாரலிடத்தேயுள்ள, வன் னிலஞ் சேர்ந்த சிறிய குடியிருப்பின் கண்ணே, மறைகின்ற ஞாயிறானது மேற்கு மலையினைச் சென்றடைந்ததும் செவ் வொளி பரவிய மாலைப்பொழுதிலே, பொலிவிழந்த ஊர்ப் பொதுவிடத்திலே, அச்சம் மிகுதியாக நிரம்பியிருக்கும் கல்லையுடைய குழிகளிடத்தேயுள்ள கலங்கல் நீரைக் கொண்டு வந்து, அதனையும் நிறையப் பெய்தலை அறியாத தன்மையராய்க் குறைந்த அளவே உண்ணும் உணவினரா யிருப்போர் அங்குக் கூடியிருக்கும் மறக்குடியினர். துவர்த்த நிறத்தைக் கொண்ட ஆடையினையும், செவ்விய அம்புத் தாடையினையும் உடையவரான அவ்விடத்து மறவர்கள் இரவுப் போதிலே, வழிப்போவாரைக் கொள்ளையிடலின் பொருட்டாக, நெறியினை நோக்கியபடியே நெறியயலே பதுங்கியிருப்பார்கள். அச்சம் வருதலையுடைய அத்தகைய காட்டு வழியிடையே செல்லுதலைக் கருதுவார் நம் தலைல ராய அவர் அங்ஙனமாயின், நாம்தான் அதனை மறுத்துப் பேசுவதற்கும் வல்லமை உடையேம் வேமோ? நாம் மென்மைத் தன்மையினேம் அல்லேமோ!" என விம்மிய சொல்லை உடையவளாக என் முகத்தை நோக்கிக் கூறினாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/68&oldid=1627190" இலிருந்து மீள்விக்கப்பட்டது