பக்கம்:நற்றிணை 1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

நற்றிணை தெளிவுரை


நின் தலைவி அவ் வேளையிலே, அவளுடைய மலரனைய கண்களிடத்தே நின்றும் பெருகி வழிந்த கண்ணீர்த் துளிகள், அவளுடைய நல்ல மார்பகத்தேயுள்ள அழகிய நகில்களின் எல்லைக்கண்ணேயும் சென்று அடைந்தவாய், மிகுதியான வெள்ளமாகவும் பரவி நின்றன இதனை அறிவாயாக!

கருத்து: 'நின் பிரிவைப் பற்றிக் கேட்ட பொழுதேயே துன்புற்று அழுதவள், நின்னைப் பிரிந்து நெடுநாள் உயிர் தரித்திராள்; ஆதலின், நீயும் காலத்தை நீட்டியாதே விரையச்சென்று வினைமுடித்து மீள்க' என்பதாம்.

சொற்பொருள்: படுசுடர் - மாலை ஞாயிறு. பகுவாய் நெடுவரை - பிளப்புக்களையுடைய நெடிய மலைப்பக்கம். புலம்பு கூட்டுண்ணும்' என்றது, 'பசியாலான வருத்தத்தைக் கூடியிருந்து உண்டபடியிருக்கும்' என்பதாம். கலுழி- கலங்கல்நீர். 'நிறைபெயல் அறியா' என்றது, அக் கலங்கல் நீர் தானும் நிறையக் குடித்தற்குப் போதாதபடி குறைவாகப் பகுத்துக் குடித்தற்கே அமைகின்ற தன்மையுடைய கோடை யின் நிலைமையை. முலைக்கரை - நல்களாகிய கரையிடம் ; நகில்களின் மேற்பக்கம்.

உண்ண

விளக்கம் : வழியின் அஞ்சுவரு தன்மையினை நினைந்தா ளான தலைவி, ஆறலைத்தன்றி வாழ்தற்கியலாத வறுமை யுடையராய், வழிவருவாரைக் கொள்ளையிட்டு லையே எதிர்பார்த்திருக்கும் மறவரது கொடுந்தன்மையைக் கூறுகின்றாள். அக் காட்டு வழியூடு தலைவர் செல்லத் துணிந்த வன்கண்மையை நினைக்கவும், அவளுள்ளம் பெரிதும் கலங்குகின்றது; கண்கள் நீரைச் சொரிகின்றன. அன்பும் மென்மையுமே தன்பால் உறவுகொண்ட நாள்முத லாகத் தலைவனிடம் எழக்கண்டு இன்புற்றவள் தலைவி. தலைவன் பால் அருநெறியிற் செல்லும் துணிவும், ஆறலை கள்வர்க்கு அஞ்சாத திண்மையும், பொருட்பற்றும் மிக்செழுதலைக் கண்டதும், அவள் பெரிதும் கலங்குகின் றாள் ஆனால் அதுவே ஆடவரது இயல்பும் தகுதியுமாதலை உணர்பவள், அவன் முடிபை ஏற்று ஆற்றியிருக்கும் கற்புத் திண்கையினையும் பெறுகின்றாள். அவள்பால் தோன்றிய இந்த உளமாற்றச் செவ்வியை இச் செய்யுள் நமக்குக் காட்டும். ஆயினும், “பிரிவினைப் பொறுக்கலாற்றாத மிகுதியைத் தோழி நயமாக அறிவித்து. அவளது காதன் அவனை விரையத் திரும்புமாறு வற்புறுத்தும்' இனிமைச் செறிவும் விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/69&oldid=1627191" இலிருந்து மீள்விக்கப்பட்டது