பக்கம்:நற்றிணை 1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

69


இறைச்சி : 'ஆறலை கள்வர்கள் அதர்பார்த்து அல்கி யிருத்தலைப்போலத், தலைவனது பிரிவை நோக்கியபடி, லைவியைப் பற்றிக் கொள்ளுதற்குப் பசலையும் செவ்வி நோக்கியபடி காத்திருக்கின்றது' என்பதாம்.

34. முருகன் மடவன்!

m.

பாடியவர் : பிரமசாரி. திணை : குறிஞ்சி. துறை : தோழி, தெய்வத்திற்கு உரைப்பாளாய், நெறி விலக்கியது.

[(து-வி.) களவுக் காலத்துத் தலைவனின் பிரிவினாலே துயருற்ற தலைவியைக் கண்டு. இவள் முருகால் அணங் கினாள்’ என அன்னை வெறியெடுப்பக் கண்ட தோழி, முருகனை முன்னிலைப் படுத்தினளாக இவ்வாறு கின்றாள்.]

கடவுட் கற்சுனை அடைஇறந்து அவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு காந்தட் குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்

பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்

அருவிஇன் இயத்து ஆடும் நாடன்

மார்புதர வந்த படர்மலி அருநோய்

நின்னணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து

கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி

வேலன் வேண்ட வெறிமனை. வந்தோய்!

கடவுள் ஆயினும் ஆக;

மடவை மன்ற வாழிய முருகே!

கூறு

10

5

10

மலர்களைக்

எம் கடவுளான முருகே! நின் இத்தகைய மடமை யோடுங் கூடினாயாக. நீ நெடுநாள் வாழ்வாயாக! கடவுள் தன்மை பொருந்திய மலைச்சுனையிலே யிருந்தும், இலைகளை விலக்கி மேலெழுந்து வளர்ந்திருந்தவும், பிறர் கொய்யாத தன்மையுடையவுமான குவளை கொய்து, அவற்றோடு குருதியின் ஒள்ளிய செந்நிறத்தை உடையவான செங்காந்தட் பூக்களையும் கொய்து கலந்து, இரண்டும் கலந்தவண்ணம் விளங்கும்படியான மாலைகளைக் கட்டுவர். அப்படிக் கட்டிய மாலைகளைச் சூடிக்கொண்ட வராகப் பெருமலையின் பக்கம் எல்லாம் பொலிவுபெறுமாறு ஆடுகின்றவர் நினக்குத் தொண்டு நேர்ந்தாரான சூரரமகளிர். வீழும் அருவியின் ஒலியே தம் ஆட்டத்திற்குரிய இனிதான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/70&oldid=1627192" இலிருந்து மீள்விக்கப்பட்டது