பக்கம்:நற்றிணை 1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

71


அன்பிலே திளைத்தாளாக, அவனூர் பொலிவு பெறுமாறு அவனோடு கூடிக்களித்து இல்லறம் நிகழ்த்தக் யிருப்பாள் என்பதாம்:

சுருதி

மேற்கோள் : * இது முருகற்குக் கூறியது' என நச்சினார்க்கினியரும் (தொல். பொருள். சூ. 114 உரை); து முருகனை முன்னிலையாகக் கூறியது' என இளம் பூரணனாரும் (சூ 112 உரை) காட்டுவர்.

இது

35.

கண் பசந்த காரணம்!

பாடியவர்: அம்மூவனார். அம்மூவனார். திணை : நெய்தல். துறை: மணமனைப் பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.

[ (து-வி.) மணம் பெற்றுத் தலைவி தலைவனோடு கூடியதன் பிற்றை நாளிலே, தலைவன், தோழியிடத்தே. 'நீ இதுகாறும் தலைவியை நன்றாக ஆற்றுவித்திருந்தனை' எனப் புகழ்ந்து கூறுகின்றான். அதனைக் கேட்ட தோழி, தலைமகனின் சால்பைப் புகழ்வாளாக இப்படிக் கின்றனள்.]

பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி

கூறு

கிளைசெத்து மொய்த்த தும்பி, பழம்செத்துப்

பல்கால் அலவன் கொண்டகோட்கு அசாந்து

கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்

5

இரைதேர் நாரை எய்தி விடுக்கும்

துறைகெழு மாந்தை அன்ன இவள்நலம்

பண்டும் இற்றே: கண்டிசின் தெய்ய;

உழையின் போகாது அளிப்பினும், சிறிய

ஞெகிழ்ந்த கவின்நலம் கொல்லோ மகிழ்ந்தோர்

கட்களி செருக்கத்து அன்ன

காமம்கொல்?-இவள் கண் சந் ததுவே!

10

பொங்கிவந்து மோதுகின்ற அலையானது பொருதிய தனாலே, நேரிதாகிய மணல் அடுத்திருப்பதான கடற்கரையி னிடத்தே உதிர்ந்துகிடந்த புல்லிய காம்பையுடைய கரு நாவலின் பெரிய கனியினைத், தம்மினமென்று கருதி வண் டினம் மொய்க்கும். அவ்வேளையிலே, அதனைப் பழமென்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/72&oldid=1627194" இலிருந்து மீள்விக்கப்பட்டது