பக்கம்:நற்றிணை 1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

75


பினேம். எம்மைப் போல இவ்வூரும் அலர்உரை பயிற்றித் துயிலொழித்திருப்பது எதனாவோ? என்கின்றனள். இதனைக் கேட்கும் தலைவன், விரைவாகத் தலைவியை மணந்து இல்லறத்தே இன்புற்று வாழ்தலைச் செய்தற்கு முற்படுவான் என்பதாம்.

.

உள்ளுரை: 'பிடி புலம்புமாறு அதனது களிற்றைப் புலி தாக்கிக் கொல்லாநிற்கும் நாடன்' என்றது, இரவுக்குறி வரும் தலைவனைத் தான் துன்புற்றுப் புலம்புமாறு அவனுக்கு ஏதமுண்டாக்கும் நெறி என்பதாம். அதனால், இரவுக்குறி தவிர்தலையும், தலைவியை மணந்து கோடலை பும் விரும்பினளாம்.

37. என் பரம் அன்று!

பாடியவர்: பேரிசாத்தனார். "திணை : பாலை. துறை: வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி சொல்லியது.

[(து-வி.) வரைபொருளைத் தேடிவருதற் பொருட்டாகச் செல்ல முடிவு செய்த தலைவன், தலைவியின் தோழியிடம் “நான் வரும்வரை தலைவிக்கு ஆறுதல் கூறி இருக்க, என்றான். அவனுக்குத் தோழி சொல்லுவதாக அமைந்தது

இது.]

பிணங்குஅரில் வாடிய பழவிறல் நனந்தலை உணங்குஊண் ஆயத்து ஓர்ஆன் தெள்மணி பைபய. இசைக்கும் அத்தம் வைஎயிற்று இவளொடும் செலினோ நன்றே; குவளை நீர்சூழ் மாமலர் அன்ன கண்அழக் கலையொழி பிணையின் கலங்கி மாறி அன்பிலிர் அகறிர் ஆயின் என்பரம் ஆகுவது அன்று இவள் அவலம் - நாகத்து அணங்குடை அருந்தலை உடலி, வலன்ஏர்பு ஆர்கலி நல்ஏறு திரிதரும்

கார்செய் மாலை வரூஉம் போழ்தே.

5

10

ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு கிடக்கின்ற சிறு தூறுகளும், பழையதான நல்ல தோற்றங்களும், வாடிப் போய்க் கிடக்கும் அகன்ற இடத்தைக் கொண்டிருப்பது காடு. அவ்விடத்து, உணவில்லாதுபோயினதனாலே வாட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/76&oldid=1627198" இலிருந்து மீள்விக்கப்பட்டது