பக்கம்:நற்றிணை 1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

தாகுத்த சான்றோர் தம்பெயர் யாதெனச் சொல்லற் கேதுவாம் குறிப்பெதும் பெற்றிலேம்; எனினும் அவர்தம் அகத்திணைப் புலமை ஈடற்ற தென்பதித் தொகையால் விளங்கும்! தொகையின் எல்லையும் தொகுத்திடு செயுட்களின் அடியள வெல்லையும் அமைத்துத் தொகுத்த அருமை இவர்தம் அறிவின் செழுமையே! நற்றிணைச் செயுள்நலம் நன்சறிந் தின்புற நல்லதோர் பொழிப்புரை நல்கியே உதவினோர் பின்னத் தூரினர் பெருமைசேர் புலமையர் நாரா யணசாமி அய்யராம் நல்லரே! இவர்தம் பணிக்கோர் ஈடெதும் சங்கிலை! இவர்க்குப் பின்னர் இவருரை தனையே விரித்தும் வேண்டுவ சேர்த்தும் வளர்த்தும் பேருரை செய்தவர் பெருமழைப் புலவர்! சித்தாந்த கலாநிதி செந்தமிழ் வலவர் ஒளவை துரைசாமிப் பிள்ளையும் பின்னர் விரிவாம் ஓருரை விளக்கம் தன்னை அமைத்து நல்கியே அரும்புகழ் கொண்டனர்! சமாசச் சங்க இலக்கியப் பதிப்பினுள் 30 35 40 46 நற்றிணை மூலம் நல்வணம் இலங்கும்! 50 மர்ரே நிறுவன மக்கள் பதிப்பினும் நற்றிணைச் செயுட்கள் நயனுற விளங்கும்! இவர்கள் தம் முயற்சியால் எழில்சேர் நற்றிணை நயத்தினைப் புலவோர் பலரும் நாடியே கற்றின் புற்றும் கவிநலம் பொருள் நலம் 55 உற்றின் புற்றும் ஒளிசேர் நற்றிணை வளத்தின் புற்றும் உரையொடு எழுத்தினும் வழங்கிப் பரவிட வாய்ப்பன செய்தனர்! நற்றிணை நாட்டிற் பரவிட நயப்பார் பெருகினர் நற்றிணைப் பெருமையும் உயர்ந்ததே! 60 தமிழன்பர் யாவரும் இனிதாக் கற்றிட உதவிடும் வகையில் உரையொடு பாட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/8&oldid=1627116" இலிருந்து மீள்விக்கப்பட்டது