பக்கம்:நற்றிணை 1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

79


[(து-வி.) முதற் கூட்டம் தெய்வச் செயலாலே வாய்த் தது. அதன்பின், தலைவிக்கு நாணம் மேலெழத் தலைவன், அவளைத் தெளிவிப்பானாக இவ்வாறு கூறுகின்றனன்.)

சொல்லின் சொல்எதிர் கொள்ளாய், யாழநின் திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக் காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் தலைமருப்பு ஏய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ அல்ல; நண்ணார் அரண்தலை மதில ராகவும், முரசுகொண்டு ஓம்பு அரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூடல் அன்னநின்

கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.

5

10

அன்புடையாய்! யான் நின்னை நாடியவனாகச் சில சொற்களைக் கூறினால், அச்சொற்களை எதிரேற்றுக் கொள்ளாயாய், நின் திருமுகத்தைக் கவிழ்ந்தனையாய், நீ நாணமுற்று நிற்கின்றனை! திடுமெனக் காமமானது என்பாற் கைகடந்து மிகுதியாகுமாயின், அதனைத் தாங்கிக் கொள்ளுதல் என்பதும் எனக்கு எளிதாகுமோ? வளைந்த கருநிறக் கோடுகளையுடைய புலியினது பெரிய முதுகிலே, அது நடுங்கிச் சோருமாறு குத்தி விளையாட்டயர்ந்த வேழத்தினது. புலால் நாற்றத்தையுடைய தலையிடத்துக் கொம்புகளைப் போலக் கடைமணிகள் சிவப்படைந்த நின் கண்கள் தாமும், என்பாற் சினவா நின்றன. அவை அல்லாமலும், பகைவர் கோட்டையிடத்துத் தலைமதி லிடத்தே வந்து போந்தாராகவும், அவரது முரசத்தைக் கைக்கொண்டு, அவராலே காக்கப்பட்ட அரணையும் கைப் பற்றி வெற்றிகொள்ளும் போராடும் செவ்வியுடைய பாண்டியனது பெரும்புகழினையுடைய கூடன்மா நகரத்தைப்

போன்றதான. தொய்யிற் கரும்பு தீட்டப்பெற்றதாய்

விளங்கும் நின்தோள்களும், என்னைத் தாம் மறுத்தவாய் வருத்துகின்றனவே?

ஏற்க

கருத்து: 'என்னை மறாதே ஏற்றுக்கொண்டு, என் குறையினைப் போக்குவாயாக' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/80&oldid=1627202" இலிருந்து மீள்விக்கப்பட்டது