பக்கம்:நற்றிணை 1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

நற்றிணை தெளிவுரை


நீர்த்துறைக்கு உரியனாகிய தலைவனும், சிறந்தோனாகிய தன் தந்தையின் பெயரினைக் கொள்வானான புதல்வன் பிறந்ததனாலே, கள்வனைப்போலத் இல்லிற்குள்ளே வந்தனன் போலும்!

தன் தன்

கருத்து: 'தலைவன் புதல்வனைக் காணுமாறு வந்தானேயல்லாமல், தலைவிபால் அன்புகொண்டு அவளைத் தலையளி செய்யக் கருதி வந்தவன் அல்லன்' என்பதாம்.

சொற்பொருள்: கடி- காவல். இரட்டல் - அடிக்கடி ஒலித்தல். குரை - ஒலி. பெரும்பாண் - பெரும்பாணாகிய சுற்றம். நெய்யாட்டு - நெய் முழுக்கு; கருவுயிர்த்ததும் முழுக்காட்டிய முழுக்கு. பெயரன் பெயரினைக் கொள்வோன்.

விளக்கம் : விரிச்சி - நற்சொல்; இங்கே நன்னிமித்த மாகக் கொள் 'கள்வன்போல வந்தனன்" என்று பரத்தை பழிக்கின்றாள். பகலில் வந்தாற் காணும் தொடர்புடைய பரத்தையர் பலரும் பற்றிக்கொள்வாரென அஞ்சியும், தன் மனைவியும் பிறரும் தன் செயலைக் குறித்துச் சினந்து கொள்வதற்கு அஞ்சியும், அனைவரும் உறங்கியிருக்கும் இடையாமப் போதிலே காலடியோசையும் மணியோசையாற் கேளாதிருக்கும் செவ்வி பார்த்துக் கள்வனைப்போல வீட்டினுள் நுழைந்தனன் என்கின்றாள். ' தன் புதல்வன்மீது பாசம் எழப்பெற்றவனாகத் தானே சென்று நுழைகின்றனன் என்றதும் ஆம் : அழையாது தானே திருடனைப்போலச் சென்று புகும்' எளியவன் என்கின்றனள்.

மேற்கோள்: "முன்வருங்காலத்து வாராது, சிறந்தோன் பெயரன் பிறத்தலான்' வந்தான், எனத் தோழி கூறினாள் எனக் கூறுவர் நச்சினார்க்கினியர். (தொல் பொருள். சூ 146 உரை.)

இருவர்க்கும் சிறந்த புதல்வனை நினையாமையால் தலைமகன் தனிமை யுறுதற்கண்ணும்' தோழிக்குக் கூற்று நிகழுமென்பதற்கு இச் செய்யுளை இளம்பூரணர் காட்டுவர் (தொல். பொருள். சூ. 148. உரை.)

பிற பாடங்கள் : 'பசுநெய் கூர்ந்த' என்பது. 'பசிநோய் கூர்ந்த எனவும்; 'ஈரிமை' பொருந்த' என்பது, 'உரிமை பொருந்த' எனவும் வழங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/83&oldid=1627205" இலிருந்து மீள்விக்கப்பட்டது