பக்கம்:நற்றிணை 1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

நற்றிணை தெளிவுரை


வழிகளூடே, நெடுந்தொலைவுக்குச் சென்று, அவரும் நின் பொருட்டாக வருந்துவர், காண்பாயாக!

கருத்து : அவர் வருந்துவது, இல்லறமாற்றியும், விருந் தோம்பலிலே சிறந்தும் புகழடைவதற்காகவே' என்பதாம்.

சொற்பொருள்: களரி - கர்பட்ட களர்பட்ட பாழ்நிலம். நீறு புழுதி. பார் - பாறை; கூவல் - கிணறு. 'நல்லிசை விருந்து' என்பது, சான்றாண்மை உடையாருக்கு அளிக்கும் விருந்து. நெய்துழந்து அட்ட விளர் ஊன்' என்பது நெய்யுடை ஊனடிசிலும் ஆம். 'குறுநடை'-குறுக நடக்கும் நடை: இது இரவுப்போதிலே விருந்தினரை உபசரித்த தளர்ச்சியால் உண்டாய வருத்தம்.

விளக்கம் : குறுநடைக் கூட்டம் வேண்டுவோர்" என்றது 'நின்பால் கடமைகளையாற்றும் செவ்வி சிறந் திருப்பதனைக் கண்டும் நின்னை விரும்புவார்' என்பதாம். 'புகை படிந்து வியர்வரும்பிய நெற்றியுடன் குறுநடை நடந்து வரும்' அந்தத் தலைமைப் பண்பினைத் தலைவரும் பெரிதும் விரும்பினர். எனவே, நீதான் அதனை விரும்புதலும், அவர் தாம் அதற்கு வேண்டுமளவு பொருள்தேடி வருதலும் வேண்டியவாமே என்கிறாள் தோழி. கோடைக் காலத்து, வழியிடை தம்மேற் படிந்த புழுதியைச் சிறுகூவலிடத்து நீரிற் கழுவித் தம் வருத்தம் தீர்தலைப் போலப், பிரிவுத் துயராலே வந்துற்ற நின் பசலையெல்லாம், அவர் மீளவந்து நின்னை இன்புறுத்த மறைந்துபோம் என்பதாம்.

பிற பாடம் : 'பா அர் மலி சிறு கூவல்' என்பது. 'பாரம் மலி சிறு கூவல்' எனவும் வழங்கும். பாரம் - பருத்தி: பருத்தி வாணிபர் சென்று தங்கிக் களைப்பாறியதனால், சூழவும் பருத்திப் பஞ்சுத் துகள் மலிந்து கிடந்த இடம்

என்க.

4. மறப்பதற்கு அரிதாகும்!

பாடியவர்: கீரத்தனார். 'திணை : முல்லை. துறை: வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

[ (து-வி) வினையைச் செவ்விதாக முடித்ததன் பின்னர்த் தன் நாட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறான் தலைவன். காட்டு வழியே வருவதாகக் குறித்திருந்த கார் காலத்து வரவைக் கண்டதும், அவன் மனம் முன்னை நினைவுகளாலே மயங்குகின்றது. அதனைக் கூறுபவனாகத் 'தேரை விரையச் செலுத்துமாறு பாகனை ஏவுகின்றான்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/85&oldid=1627207" இலிருந்து மீள்விக்கப்பட்டது