பக்கம்:நற்றிணை 1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

89


நிற்குமாறு அதன்பால் விளங்கும் கொழுமையான திரினைக் கொய்தற்கு நினைப்பார்கள் குறவர் குடியினர். செழுமையும் பல பிரிவுகளையும் கொண்ட பல்வேறு உறவின் முறையாரை உடையவரான அக் குறவர்கள் அதனைக் குறித்து ஊர்மன்றத்தைச் சேர்ந்து விழவயர்தலை யும் மேற்கொள்வார்கள். அங்ஙனம், அவர் விழவயவரும் முற்றத்திடத்தே, குடம்போற் பருத்துத் தொங்கும் காய் களைக் கொண்ட ஆசினிப் பலாமரங்களின் உயரமான கிளைகள் தோட்டத்தளவுக்கும் நீண்டவாய் வளர்ந்து நிற்கும். அக் கிளைகளிலே மின்மினிப் பூச்சிகள் அமர்ந்து ஒளிபரப்பியபடி இருக்க, அந்த வெளிச்சத்தை விளக்காகக் கொண்டு, வானத்தே செல்லுகின்ற மழைமேகத்தின் போக்கினைக் கண்டறிவர். அக் குறவர்கள் அத்தகைய நல்ல மலைநாட்டிற்குத் தலைவனாகிய குன்றவனின் அன்பிற் குரிய மகள் நம் தலைவி. அவள்தான் ஒப்பற்ற தன் தோழி யரோடும் அருவிநீரிலே திளைத்தாடி. அவ்விடத்து நீரலை களாற் சிவப்புற்ற, பெரிதும் அமர்த்த, குளிர்ச்சியான கண் களைக் கொண்டவள். அவற்றால் அவற்றால் நம்மைக் குறிப்பிட்டு நோக்காதே, மறைவாகக் காணும் பார்லையினளாய், இளமுறுவலையும் நமக்குத் தந்துவிட்டுத் தன் யிடத்தும் சென்று சேர்ந்தனள். அந்தக் காமக் குறிப்பினை நினைந்து, இவ்விடத்தே வந்துள்ள நினக்கோ, அவள் அறிந்து துணையாகக் கொள்ளத்தக்க எளியவள்?

மனை

கருத்து அவளை முயற்சியுடன் முயற்சியுடன் வரைந்து கொண் டதன் பின்னரே அடைதற்கு இயலும்' என்பதாம்.

சொற்பொருள்: பொருவில் ஆயம் - ஒப்பற்ற ஆயம்.

குறியா நோக்கம் - கடைக்கண் பார்வைருதப்பட்டுச் சிவந்த

வெறியாட்டு அயர்கின்ற முற்றம். ஆசினி ஆசினிப் பலா; பலா வகையுள் ஒன்று.

விளக்கம் : 'குறியா நோக்கமொடு முறுவல் நல்கி மனைவயிற் பெயர்ந்த' அவளது குறிப்பால் மனையடுத் துள்ள இரவுக்குறி நேர்தலாகிய ஒன்றை உணராதே, பகற்குறி வந்து ஏங்கும் தன் செயற்கு வருந்துகின்றான் அவன். 'குறவர் தினையரிதலைக் குறித்து விழாவயர்த லைக் குறிப்பிட்டது, இனி அவள்தானும் புனங்காவலுக்குப் புறம்போதலும், அவளைத் தான் களவிற் கலத்தலும் வாயாது என்பதனாலாம். 'மின்மினி விளக்கத்துச்

5.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/90&oldid=1627212" இலிருந்து மீள்விக்கப்பட்டது