பக்கம்:நற்றிணை 1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

91


அதனுட் புகுந்து சென்று மீன்களைப் பிடித்துவரும் பரதவ ருடைய மகள்! நீயோ வென்றால், நெடிய கொடியானது அசைந்தாடிக் கொண்டிருக்கும், 'நியமம்' என்னும் மூதூரிடத்தே இருக்கின்ற, கடிய செலவினைக் கொண்ட தேர்ப்படைகளை உடையவனான மன்னனது, அன்பிற்குரிய மகனாக இருக்கின்றனை! நிணத்தினை உடைய சுறாமீனை அறுத்திட்ட தசைகளைக் காயவைத்தலை வேண்டினமாசு, அவற்றைக் கவர வரும் புள்ளினங்களை ஒட்டியவராச

யாமும் உள்ளேம். எமக்கு நலன் என்பது யா தாகுமோ? யாம் புலவு நாற்றத்தை உடையேம்! அதனால். அகன்று நின்றே சொல்வதனைச் சொல்வாயாக! பெரு நீரான கடலையே விளைவயலாகக் கொண் வாழும் எமது சிறிதான நல்வாழ்க்கை, நும்மோடும் ஒப்பாக விளங்குவதும் அன்று மேலும், எங்கள் பரதவர் குலத்தினருள்ளேயே, இவளை மணக்கத் தகுந்த தலைமைப் பாட்டினரையும் யாம் உடையராயிருக்கின்றேம்

கருத்து:

எமக்கு

ஏற்றவன் நீயன்றாதலின்,

பக்கலில் வராதே அகன்று போக' என்பதாம்.

எம்

சொற்பொருள் : கானல் - கடற்கானல். காமர் -அழகு. 'நியமம்'-ஓர் ஊர். செம்மல்-தலைமை.

என்று மீனெறி

விளக்கம்: நெடுங்கொடி நுடங்கும் நியம் மூதூர் என்றது. கோசர்க்கு உரியதான பேரூர்: இந்நாளிலே, இவ்வூர் 'நெகமம் 'நெகமம்' என்று விளங்குவது. அகநானூற்றுத் தொண்ணூறாவது செய்யுளைச் செய்த மருதனிள நாகனார், அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது பெருங்கடல் முழக்கிற்றாகி, யாணர், இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர், கருங்கட் கோசர் நியமம்' இவ்வூரைக் குறிப்பர். 'கடல் கலங்க உள்புக்கு பரதவர் எம்மவராதலின், நின்னைக் காணின் பெரிதும் ஏதமாகும்; ஆதலின் அகன்று போக' றாள். 'உணக்கல் வேண்டிப் புள் ஓப்புவோம் எம்மை நெருங்கின் நின்னையும் அங்ஙனமே செல்லப் போக்குவேம் என்பதாம். 'புலவு நாறுதும்' என்றது, அவனுடைய நறுஞ்சாந்தணிந்த மார்பைக் கண்டு அவன் தமக்குப் பொருந்தாமை கூறி விலக்கியதாம். 'எம்மனோரின் செம்மலும் உடைத்தே' என்றது, இவளை மணத்தற்கு உரியான் உறவிலேயே உள்ளனன்' எனக் கூறிப் போக் கிய தாம்.

நினக்குப்

என்கின்

என்றது.

அகன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/92&oldid=1627214" இலிருந்து மீள்விக்கப்பட்டது