பக்கம்:நற்றிணை 1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

நற்றிணை தெளிவுரை


விளக்கம் : 'எய்கணை நீழலிற் கழியும்' என்றது. எய்யப்பட்டுக் குறியை நோக்கிச் செல்லுகின்ற கணையினது நீழல் தானும் விரைவாகச் சென்று சணை குறியிடத்துத் தைத்து நின்ற அளவிலே. தானும் முற்றவும் இல்லாதே போம். இவ்வாறே, இன்பமும் இளமையும் குறித்த பருவத்தை நோக்கி விரைவிற் சென்று, அப் பருவத்தை அடைந்ததும் அழிந்துபோம் என்பதாம். இ ளமை நிலையாமைக்கு 'நல்லதோர்' உதாரணம் இது இன்ப நுகர்வாலே இளமை தனக்குரிய பயனைத் தந்து சிறக்கும். அதனால், இன்பத்தை முற்படக் கூறினார். எய்கணை' என்றது, அவ்வாறே ஊழாற் பிறந்தது பருவத்தை அடைந்து, நல்லூழாற் கூட்டவும் பெற்ற அவரது இன்ப வாழ்வினைக் குறித்துக் கூறியதாம் 'இவ்வுலகம்' என்றது, இதன் நிலையாமையை நினைந்து. நீர் அறிவுடையீர் ஆதலின், நீர் காணீர் என்றலோ அறிது; அங்ஙனம் கண்ட நீர்தாம், அதனை மறக்காது பேணீராகவும் ஆகுவீராக என்கின்றாள். இது பிரியாமையே செய்யத் தகுவது

நிலைக்கு

.

என்று வலியுறுத்தியதாகும். வெங்காற்றால் அலைப்புண்டு பாயிைடத்து மோதித் துன்புறும் கொன்றைக் கிளைகளைக் காணும் பாணர், அதுபடுகின்ற துயருக்கு நோவாது பறையறைதற்கான கடிப்பெனவே மயங்கி இன்புறுமாறு போலனும்பிரிவின் வெம்மையாலே சோரும் இவளது இரங்குதலிவின்றி அதனைத் தாம் வாய்ப்பறை அறைந்து பழிகூறித் திரிதலினாலே இன்புறுவர் அலவற் பெண்டிர்' எனவும், அலரச்சத்தைக் குறிப்பாகக் கூறுகின்றனள். 'மன்னாப் பொருள்' என்றது, அதன் நிலையாமையைக் குறித்துக் கூறியதாகும். அதனை விரும்பிச் சென்று, வழியிடைத் துன்பமுற்று, அநுபவிக்கும் இன்பத்தையும் இழந்து, தலைவிக்குத் துயரத்தையும் தருதல் பெரிதும் அறியாமை' என்பாள். பேணீர் ஆகுவீர் என்றாள். இவற்றால், பொருள்வயிற் பிரிதல்தானும் நுகர்தற்குரிய இளமையின் கழிவுக்குப் பினனரே மேற் கொள்ளுதற்குரியது என்பதும் தெற்றென விளங்கும்.

47. சொன்னால் என்னவோ?

பாடியவர் :

நல்வெள்ளியார். திணை : குறிஞ்சி. துறை : சிறைப்புறமாகத் தோழி தலைமகளுக்கு உரைப்பா ளாய்ச் சொல்லியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/95&oldid=1627217" இலிருந்து மீள்விக்கப்பட்டது