பக்கம்:நற்றிணை 1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

97


இழந்த பெருவருத்தத்தோடும் செயலற்ற பிடி, தன் கன்றினைக் காத்துப் பேணும் பண்பினதாய் அதனைத் தழுவி நின்றாற்போலத், தலைவனின் பிரிவுக் கொடுமையால் நலனிழந்த தலைவி, நாணாகிய நலனுடைமையால். தன் துயரைப் பிறர் அறியாதபடி காக்துப் பேணி நின்றனள்' என்று, அவளது கற்பு மேம்பாட்டைக் கூறியதும் ஆகும்.

48. கண்ணுள் போலச் சுழலும்!

பாடியவர் :

பாலை. 760 50.

பாலை பாடிய பெருங்கடுங்கோ, திணை : துறை: பிரிவுணர்த்திய தலைவற்குத் தோழி

சொல்லியது

[ ( (து-வி ) தலைவியைப் பிரிந்து போதலைப்பற்றித் தலைவன் தோழியிடத்தே கூறுதலும், அவள், அதனால் தலைவிக்கு நேரும் துயர மிகுதியை அறிவுறுத்தி, அவன் நினைவை மாற்ற முயல்வாளாக, இவ்வாறு கூறுகின்றாள்.)

அன்றை அனைய ஆகி, இன்றும்எம் கண்உள போலச் சுழலும் மாதோ- புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ

வைகுறு மீனின் நினையத் தோன்றி, புறவுஅணி கொண்ட பூநாறு கடத்திடைக் கிடின்என இடிக்கும் கோல்தொடி மறவர்

5

வடிநவில் அம்பின் வினையர் அஞ்சாது! அமரிடை உறுதர, நீக்கி, நீர்

எமரிடை உறுதர ஒளித்த காடே.

கோங்கினது

ஐயனே! மெல்லிய இதழ்மிக்க குடை போன்ற புல்லிய புறவிதழ்களையுடைய பூக்கள், வைகறைப் பொழுதிலே வானிடத்துக் காணப்படும் மீன்களோ எனக் காண்பார் கருதும்படியாகத் தோன்றும். அவ்வாறு காடெங் கணும் அழகு கொண்டிருந்ததாய் மலர்மணம் வீசியபடி யிருந்த கன்னெறியிலே, முன்பும் நீர் சென்றீர். 'கிடின்' என முழக்கமிடும் வீரவளைகளை அணிந்தோரான மறவர்கள், கூர்மை பொருந்திய அம்பினாலே செயலாற்றும் திறனுடை

யோர் ஆவர். அவர்கள், நம்பால் எதிரிட்டு வந்து, நம்முடன் போரினைத் தொடங்கினர். அவர்கட்கு அஞ்சாதே போரிடத்தே ஈடுபட்டு அவர்களை வெற்றி கொண்டு நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/98&oldid=1627220" இலிருந்து மீள்விக்கப்பட்டது