பக்கம்:நலமே நமது பலம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் - 101

விபத்து என்பது விளைவதற்கு - இந்த இடம்தான் என்று குறிப்பாக எதுவுமில்லை. வீட்டிற்குள்ளும் நடக்கலாம். விளையாடும் இடத்திலும் நடக்கலாம். சாலையிலும் நடக்கலாம். பணியாற்றுகின்றபோதும் நடக்கலாம். சந்தோஷமாய்ச் சாப்பிடும் போது மட்டுமல்ல, தண்ணிர் குடிக்கும்போதும், படுத்துக் கிடக்கும்போதும் நடக்கலாம். எது, எப்படி நடந்தால் என்ன?

விபத்து வந்து விட்டால். உடலுக்கு வேதனையும், உணர்வுக்குச் சோதனையும் ஏற்படும். அப்போதெல்லாம் நாம் நிலைகுலைந்து போகாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

ஆகவே, எந்த நிலையில் விபத்து ஏற்படுகிறது? வந்த விபத்தை எவ்வாறு சந்திப்பது, சமாளிப்பது, சரி செய்வது, சாமர்த்தியமாக விடுபடுவது போன்ற நடைமுறைக் காரியங்களில் ஈடுபட்டு, நமக்காக உதவிக் கொள்வோம். பிறருக்கு உதவி செய்வோம். இப்படித்தான் வாழ வேண்டும். இதுதான் புத்திசாலித்தனமான வாழ்க்கையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/103&oldid=690911" இலிருந்து மீள்விக்கப்பட்டது