பக்கம்:நலமே நமது பலம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

சமையலறை 2. குளியலறை 3. கழிவறை 4. தட்டுமுட்டுச் சாமான் அறை 5. நடுக்கூடம் 6. படுக்கை அறை போன்ற பகுதிகளில்தான்.

நமது வீடுதானே, நம் இடம் தானே, நமக்கென்ன நடந்துவிடும் என்ற மேம்போக்கான சிந்தனை, கவனமின்மை, அலட்சிய மனப்பாங்கு. அவசர ஓட்டம், அறியாத்தனம், அகம்பாவ மனோபவம் எல்லாமே வீட்டுக்குள்ளேயே விபத்துக்களை வரவழைத்து விடுகின்றன.

வீட்டுக்கு விருந்தாளியாக வருகிற விபத்துக்கள் நிரந்தர விருந்தாளியாகத் தங்கி, நலம் தரும் காரியங்களில் எல்லாம் நடுநாயகமாக நின்று தொந்தரவு தந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை அறிந்து கொண்டு தடுப்பதும் தவிர்ப்பதும், சமர்த்தாக நடந்து கொள்வதும் புத்திசாலித்தனம் ஆகும்.

14. 1. தவறி விழுதல்:

14.1.1. வீட்டில் எந்த இடத்திலும் நல்ல வெளிச்சம் இருப்பது போல வீட்டைக் கட்டும்போதே நிர்மாணித் திருக்கலாம். இரவு மற்றும் பகல் நேரங்களில் கூட இருட்டுப் பகுதியாக இடங்கள் இல்லாமல், போதிய வெளிச்சம் இருப்பதாகப் பார்த்துக் கொண்டால் விபத்து நேராமல் தடுக்கலாம், குறைக்கலாம்.

14.1.2. குளியலறை, கழிவறைத் தரைகள் எல்லாம் வழுக்காத வண்ணம் பராமரிக்கப்பட வேண்டும். தினந் தோறும் சரியாக சுத்தம் செயயாமல் விட்டு விடுகிறபோது, பாசான் பிடித்து வழுக்கல் தரையாகிறபோது, வழுக்கி விழுதல் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.

14.1.3. மாடிப் படிகளில் கட்டைச்சுவர் கட்டியோ, கம்பி எல்லை வைத்தோ பாதுகாப்பாக மாடிக்குப் போகும் தடுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/126&oldid=690933" இலிருந்து மீள்விக்கப்பட்டது