பக்கம்:நலமே நமது பலம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் - 133

2. இதயம் தானே தன் பணியை - மீண்டும் இரத்த ஓட்டத்தைத் துவங்குவது போல செயற்கையான முறையில் இதயத்தை இயக்கச் செய்வது.

இந்த இரண்டாவது வழியில் எப்படிச் செயற்கை முறையில் இயக்குவது என்றால் மார்பை அழுத்தமாகப் பிடித்து அழுத்தி மசாஜ் செய்வது போல் அமுக்கி விடுதல். இதயத்துக்கு மேலே உள்ள மார்புச் சாதைகளை அமுக்கி விடுவது. இதை எல்லோரும் செய்துவிட முடியாது. இதற்காகப் பயிற்சி எடுத்தவர்கள் தாம் முறையாகச் செய்திட முடியும்.

அதனால் பயிற்சி பெறாதவர்கள், பழக்கம் இல்லாதவர் கள் உடனே செய்ய வேண்டிய தலையாய பணி, மருத்து வருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து வரவழைத்து விட வேண்டும். -

சில நேரங்களில் செயற்கை சுவாச முறையில் உயிர்ப்பூட்டவும் முனையலாம். அதற்கான விவரத்தை, செயற்கை சுவாசம் என்ற பகுதியில் விளக்கமாகக் காண்க.

மாரடைப்பு வந்தவர்களுக்கான முதலுதவி

/. மிதமான மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு:

மிதமான மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கான அறிகுறிகள் பற்றி ஏற்கனவே உங்களுக்குத் தெரியும். அதனால் அவர்களுக்கு நீங்கள் எப்படி முதலுதவி செய்ய முடியும் என்பதை இந்தப் பகுதியில் சுருக்கமாகத் தெரிவித்துள்ளோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/135&oldid=690943" இலிருந்து மீள்விக்கப்பட்டது