பக்கம்:நலமே நமது பலம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

உட்கார வைத்திருப்பது நல்லது, அப்படி உட்கார்ந்திருக் கிறபோது சற்று முதுகுப் புறமாகச் சாய்ந்தாற்போல இருக்கவும். முழங்கால்களுக்கும் சற்று மெத்தென்று

இருக்கும்படி தலையணை வைக்கலாம்.

அப்படி வைக்கப்படுகின்ற தலையணை அல்லது உதவக்கூடிய மெத்தையானது, கால்களுக்கு இரத்த ஓட்டம் செல்வதைத் தடை செய்வதுபோல இருந்துவிடக்கூடாது. இறுக்கமான உடைகள் அணிந்திருந்தால் அதனைத் தளர்த்தி விடவும்.

4. மேலும் உடல் தளர்வதாக இருந்தால், அவரை உட்கார்ந்த நிலையில் இருந்து படுக்கைக்கு கொண்டு செல்லுதல் வேண்டும். படுத்திருப்பது வசதியாக செளகரிய மாக இருப்பது போலப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்காக அவரை எப்படித் தூக்க வேண்டும் என்றால், கால்கள் இரண்டையும் ஒருவர் பிடித்துக் கொண்டு அவரது தோள்புற அக்குள் வழியா இரண்டு பக்கமும் கைகளை வைத்து அழுத்தாமல், காலம் தாழ்த்தாமல், விரைவாக அதே சமயத்தில் மெதுவாகத் தூக்கிப் படுக்க வைக்கவேண்டும்.

இதயம் தனது துடிப்பை நிறுத்தியிருந்தால் அவரை மல்லாந்து கிடப்பது போல் படுக்க வைத்து, முகத்தை மேற்புறமாக வைத்திருப்பது போல் கிடத்தவும். -

இதய சக்தியை மீண்டும் ஏற்படுத்துவதற்காக வெளிப் புற மார்புத் தசைகளை இயக்குவதற்கான பயிற்சிகளைப் பெற்றவர்கள் செய்தால் சரியாகும். அதற்கு நேரம் இல்லை யென்றால், முறைகளைத் தெரிந்து கொண்டவர்களும் செய்யலாம். ஒருயிரைக் காக்க முயல்வது ஆபத்திற்குப் பாபம் இல்லையல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/138&oldid=690946" இலிருந்து மீள்விக்கப்பட்டது