பக்கம்:நலமே நமது பலம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 139

வீங்கிப் போதல் போன்ற பலவகையான இதய நோய்கள் உண்டு.

அவற்றை எல்லாம் இங்கே எழுதுவதற்குக் காரணம் உண்டு. இதனால் திடீரென்று விபத்து எதுவும் நிகழ்ந்து விடவில்லை. நேரம் இருக்கிறது. மாரடைப்பு என்பது விபத்து போன்றது என்பதால்தான் இந்த நோயை மட்டும் இங்கே குறிப்பிட்டு விளக்கம் அளித்திருக்கிறோம்.

7. செயற்கை &Guazpop (Artificial Respiration)

7.1. செயற்கை சுவாசமுறை என்பது, சுவாசம் செய்ய முடியாமல் நின்றுபோன ஒருவருக்கு, சுவாசத்தை உயிர்ப்பிக்கும் ஓர் உன்னத முயற்சியாகும்.

7.2. தண்ணிரில் மூழ்கி விட்டவர்கள், விஷத் தன்மையால், மூர்ச்சை ஆனவர்கள்; சூரிய வெப்பத்தால் மயங்கி விழுந்தவர்கள்; புகை மண்டலத்தால் மூச்சுத் திணறலால் முச்சு இழந்தவர்கள்; மின்சார அதிர்ச்சியால் மூர்ச்சை ஆனவர்கள், மூச்சுத் திணறலால் மயக்கம் அடைந்தவர்கள் மற்றும் ஏதாவது ஒரு விபத்தில் மயக்கம் அடைந்தவர்களுக்கு எல்லாம், செயற்கை சுவாசம் என்பது உயிர்ப்பிக்கும் ஒரு வரப் பிரசாதமான உதவியாகவே அமைந்திருக்கிறது.

7.3. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுவாசம் அடைபட்டு, மார்புக் கூட்டின் அசைவும் இருக்காது. அவரது தோலின் நிறம் வெளுத்துப் போகிறது. அதாவது சற்ற நீல நிறமாகவும் மாறி விடுகிறது.

7.4. இரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்கிற சமயத்தில் உடலுக்கு உயிர்க்காற்று கிடைக்காமல் போவதால், மூளை உடனே பாதிக்கப்படுகிறது. மூளைக்கு உயிர்க் காற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/141&oldid=690950" இலிருந்து மீள்விக்கப்பட்டது