பக்கம்:நலமே நமது பலம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 143

7.2. ουσώ முக்கு மூலம் உயிர்ப்பு முறை:

7.2.1. சில சூழ்நிலைகளில் வாய் வழியாக வாய் வைத்து ஊதுவதை விட, இந்த முறை பெரிதும் பயன்தரும் முறையாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் வாய் மூலமாக முடியாத போது, அதாவது வாயைத் திறந்து அதன் வழியாக ஊத முடியாது என்கிற நிலையில் அவர் கிடக்கிறபோது, அல்லது வாய்ப் பகுதி விபத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக் கிறபோது இந்த முறையைத்தான் பயன்படுத்த வேண்டியிருக் கிறது.

7.2.2. இதுவும் வாய்க்கு வாய் முறை போலத்தான். ஆனால், இப்போது தாழ்வாயை உயர்த்தாமல் வாயை முழுவதுமாக மூடிக்கொண்டு மூக்கு வழியாகக் காற்றை உள்ளே ஊத வேண்டும். அடுத்து அவர் வாயை சுவாசம்

வெளியேறு வதற்காகத் திறந்து விடலாம்.

7.2.3. குழந்தைகளுக்கு என்றால் வாயும் மூக்கும் ஒரே சமயத்தில் காற்றை ஊதிடப் பயன்படுத்தலாம். உதவி செய்பவரின் வாய், ஒரே சமயத்தில் அவரது வாய், மூக்கு ஆகிய இரண்டு பகுதிகளிலும் இருந்து ஊத வேண்டும்.

7.3. காற்றுப்பாதை தடைபட்டிருந்தால் (Airway Obstruction):

7.3.1. மேலே கூறிய இருமுறைகளில் முயற்சித்தும், சுவாசம் உயிர்ப்பு பெறவில்லை என்றால், அவரது காற்றுப் பாதை அடைபட்டிருக்கிறது என்பதாகத்தான் உதவியாளர் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

7.3.2. மீண்டும் மீண்டும் பலமுறை இதுபோல முயற்சி செய்து பார்த்தும் பயனேதும் இல்லையென்றால், மேலும் ஒரு முயற்சியில் உதவியாளர் (Rescuer) ஈடுபட்டால் நல்லதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/145&oldid=690954" இலிருந்து மீள்விக்கப்பட்டது