பக்கம்:நலமே நமது பலம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

உடம்பின் பாதிக்கப்பட்ட வெப்பப்பகுதிகளில் இப்படிச் செய்யலாம். கிடைத்தால் மின் விசிறியைப் பயன்படுத்தி அதிகக் காற்றுப் படச் செய்து குளிர வைக்கும் முயற்சியையும் மேற்கொள்ளலாம். - -

8.1.6. ஐஸ் பை (Ice Pack) கிடைந்தால் அவரது முன்நெற்றியில் வைக்கலாம். மற்றும் நாடித் துடிப்பு நன்கு புலப்படும்படியான நெற்றி, கை, அக்குள் (Armpit), பிட்டியும் தொடையும் சேருமிடமான தொடை அக்குள் பகுதிகளிலும் ஐஸ் பையை வைத்துக் குளிர்விக்கும் பணியில் கவனம் செலுத்தலாம்.

அவசரமாக அழைக்கப்படுகிற மருத்துவப் பணியாளர்

கள் வரும்வரை, பொறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் இந்தத் தொண்டுக் கடமையில் ஈடுபடலாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/150&oldid=690960" இலிருந்து மீள்விக்கப்பட்டது