பக்கம்:நலமே நமது பலம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 153

மல்லாந்து படுத்திருப்பது போல வைக்கவும். மாரடைப்பு போன்றவற்றால் மயக்கம் ஏற்பட்டிருக்கிறபொழுது பின்புற மாக (சற்று) சாய்ந்திருப்பது போலப் படுக்க வைக்கவும்.

வாந்தி எடுப்பது போன்ற சூழ்நிலையில், அல்லது மயக்கமாகி விட்டவரைக் குப்புறப்படுத்து, கால்களை முன்னும் பின்னும் இருப்பது போலக் கிடத்தி வைத்திட வேண்டும். அவர் படுகாயம் எதுவும் அடையாமல் இருந்தால் தான், இப்படிச் செய்திட வேண்டும்.

அதிர்ச்சியால் மயக்கம் வரும் என்றோமல்லவா! இனி மயக்கமடைதல் என்றால் என்ன? அவற்றிற்கான அறிகுறிகள் என்ன? அவற்றைச் சமாளிப்பது எப்படி என்பது பற்றி விளக்கமாகக் காண்போம். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/155&oldid=690965" இலிருந்து மீள்விக்கப்பட்டது