பக்கம்:நலமே நமது பலம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பட்டிருப்பது தெரிந்தால், அதனை அகற்றி விட முயல வேண்டும். வாயில் இருக்கும் சளி, இரத்தம், வாந்தி எடுத்த துகள்கள் இவற்றில் ஏதாவது இருந்தால், கைக் குட்டை அல்லது அழுக்கில்லாத சிறிய துணி மூலம் துடைத்து விட வேண்டும். வாய்க்குள்ளே கட்டியிருக்கும் பொய்ப்பற்கள் இருந்தால் அவற்றையும் எடுத்துவிட வேண்டும்.

இந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவருக்கு மூச்சுத் திணறல் இருந்தால், தலையைப் பின்புறமாக வைத்து மெலிதாக அழுத்தித் தாழ்வாயை (Chin) சற்று மேலாக உயர்த்தி வைக்க வேண்டும்.

2. பாதிக்கப்பட்டவரை, குப்புறப் படுக்க வைத்து, கால்களை இயல்பாக மடித்து இருப்பது போலக் கிடத்த வேண்டும். அவர் கிடத்தப்பட்டிருக்கும் இடம் நல்ல காற்றோட்டமுள்ள இடமாக இருப்பது சிறந்த பாதுகாப்பாகும், மருத்துவரிடம் அவரைச் சேர்க்கிற பொழுது தெளிவாக விளக்குவதற்கு உதவியாக இருக்கும். இதனால் வைத்தியர் விரைந்து செயல்பட்டு அவரைக் காப்பாற்றி உதவி செய்ய முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/158&oldid=690968" இலிருந்து மீள்விக்கப்பட்டது