பக்கம்:நலமே நமது பலம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

5. அந்த நிலையிலிருந்து நீங்கள் அவர் வலதுபுறமாக முழங்காலிட்டு அமர்ந்தபடி, அவரை அப்படியே குப்புறக் கொண்டு வருவது போல, ஒருக்கணித்துப் படுக்கச் செய்திட வேண்டும்.

6. இவ்வாறு செய்து முடித்த பிறகு, குப்புறப்படுக்க வைக்க வேண்டும். இடது கையை மடித்து உள்ளங்கை தரையில் படுவது போல இடது காலை மடித்திருக்க, வலது கால் நீட்டியிருக்க, வலப்புற முகம் தரையில் இருப்பதுபோல முகத்தை வைத்துப் படுக்கச் செய்திடவேண்டும். இயல்பான சுவாசம் ஏற்படக்கூடிய உதவிகளைச் செய்யவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/162&oldid=690973" இலிருந்து மீள்விக்கப்பட்டது