பக்கம்:நலமே நமது பலம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எவ்வாறு சமாளிப்பது?

முதலில் மூச்சடைப்புக்கான காரணம் என்னவென் பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் தெரிந்தால் தான் காரியம் கணக்காக நடைபெறும். எதிர்பார்த்த பலனும் எளிதாகக் கிடைக்கும்.

வாய்க்குள்ளே உணவுத் துகள்கள் அல்லது கடினமான பொருட்கள் சிக்கிக் கொண்டால், அவரை மல்லாந்து படுக்க வைத்து, தலையை ஒரு புறமாகச் சாய்த்து வைத்து, முடிந்தவரை வாய்க்குள் கையை விட்டு சிக்கிய பொருளை எடுத்துவிடவேண்டும். அப்படித்தடைப்படுத்திய பொருளை எடுக்க முடியாமற் போனால் அடுத்த முறையைத் (கீழ்க்காணும் முறை) தான் பின்பற்ற வேண்டும்.

பாதிக்கப்பட்டவரின் பின்னால் நின்று கொண்டு, அவரது இடுப்பைச் சுற்றி இரு கைகளையும் கொண்டு வந்து, அவரது அடிவயிற்றுப் பரப்பில் கைகளைக் கோர்த்துக் கொள்ளவும். இடதுகை வலதுகை மணிக்கட்டுப் பகுதியைப் பற்றி இருக்க, வலது கையின் கட்டை விரலானது நோயாளி யின் அடி வயிற்றை அழுத்தவும் (Press). அடிவயிற்றை அழுத்தி, சற்று மேல் தூக்கியவாறு அதிக அழுத்தம் கொடுக்கிறபோது, நோயாளியின் நுரையீரலில் இருந்து வெளிவருகிற காற்று வேகத்துடன் வர, அடைபட்ட பொருளை வெளியேற்றி விடக்கூடும்.

அவருக்கு அனுகூலம் கிடைக்கிறவரை, இப்படியாகப் பலமுறை செய்து முயற்சிக்கவும். அடிவயிற்றைத்தான் அழுத்த வேண்டுமே தவிர அவரது மார்பு எலும்புகள் அழுத்தப்பட்டு உடைந்து, பாதிக்கப்படாத வண்ணம் செய்திட வேண்டும். இந்த முதலுதவி முறைக்கு sognpuutlsl (p6op (Heimlich maneuver) 6T6rgyl Gluuit.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/170&oldid=690982" இலிருந்து மீள்விக்கப்பட்டது