பக்கம்:நலமே நமது பலம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17Ο டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

செய்ய வேண்டும். இது வெளிப்புறத்திலிருந்து இதயத்தை இயக்கும் முயற்சிபோல அமைந்திருக்கும்.

அடைபட்ட பொருள் வெளியே வந்தபிறகு செயற்கை சுவாச முறையைப் பின்பற்றவும்.

புகைக்குள் சிக்கிக் கொண்டால் (Poisonous Fumes):

பயங்கரப் புகை மூட்டத்துக்குள் சிக்கிக் கொண்டால் அது நச்சுப் புகையை சுவாசிப்பதற்குச் சமமே. அதனால் மூச்சடைப்பு மயக்கம் போன்றதெல்லாம் உடனே ஏற்பட்டு

விடும்.

ஆகவே புகை மூட்டத்திற்குள் சிக்கிக் கொண்டவரை உடனே வெளியே கொண்டு வந்து, சுத்தமான காற்றை சுவாசிப்பது போன்ற சூழ்நிலையை உண்டாக்கி விட வேண்டும்.

வீட்டிற்குள்ளே இப்படிப்பட்ட பயங்கரப் புகை மூண்டுவிட்ட நிலையில், அகப்பட்டுக் கொண்ட்வரை விடுவித்து வெளியே கொண்டு வர முயற்சிக்கிறவர், மிகவும்

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

உள்ளே நுழைய முயற்சிப்பதற்கு முன்பு நன்றாக மூச்சை இழுத்து வெளியே விட்டு, பிறகு நன்றாக மூச்சிழுத்துத் தம் பிடித்துக் கொண்டு, உள்ளே சென்று உடனே அவரைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வரவேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் உள்ளே மூச்சை விட்டு விட்டு, சுவாசித்து விடக்கூடாது. மூடியிருக்கும் ஜன்னல்களின் கதவை நன்றாகத் திறந்து விட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/172&oldid=690984" இலிருந்து மீள்விக்கப்பட்டது