பக்கம்:நலமே நமது பலம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 179

25. நீறில் &D&@2,69 (Drowning)

நீருள் அல்லது மற்ற ஏதாவது அமிலம் அல்லது திரவத்துள் மூழ்கிப் போதல் என்பது மிகவும் ஆபத்தான விபத்தாகும். -

நீருள் மூழ்குகிறபோது தண்ணிர் உள்ளே புகுந்து கொண்டு, நுரையீரலுக்குள் போகும் பிராணவாயுவைத் தடுத்து அடைத்துக் கொள்வதாலும், இரத்தத்திற்குப் போதிய பராமரிப்பு கிடைக்காமல் போவதாலும் தான் மூச்சடைப்பும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு மூர்ச்சடைய வைத்து விடுகிறது.

நீரில் ஏற்படுகிற விபத்து எல்லா நாடுகளிலுமே அதிக அளவிலேதான் நிகழ்கின்றன. நீச்சல் குளங்களில், வீட்டில் இருக்கும் குளிநீர்த்தொட்டிகளில் (Tub), ஆறு, ஏரி, குளம், கடல் போன்ற இடங்களிலும் விபத்துக்கள் ஏற்படுவது சர்வ சாதாரணமாகவே நிகழ்ந்து வருகின்றன.

அறிகுறிகள்: நீரில் மூழ்கியவரின் உதடுகளும் தாடையும் நீலநிறம் பாய்ந்தனவாக மாறி விடுகின்றன. வாயின் வழியாக, மூக்கின் வழியாக நுரை வழிந்து கொண்டு வரும். அவர் மூச்சுவிடத் திணறுவார். சில சமயங்களில் சுவாசமும் நின்று போய்விடும்.

சமாளிப்பது எப்படி?

நீரில் மூழ்கியவர் ஏற்பட்ட விபத்தின் காரணமாகக் குழம்பிப்போய் மனம் கலங்கிப் போயிருப்பர். அவர் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக உயிரைக் காப்பாற்ற வருகிறவருக்கே உயிரிழப்பு ஏற்படுவது போன்ற முயற்சிகளிலும் தன்னை அறியாமலே நடந்து கொள்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/181&oldid=690994" இலிருந்து மீள்விக்கப்பட்டது