பக்கம்:நலமே நமது பலம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 187

இழந்து வளர்ச்சி குன்றுதல், இப்படி ஒன்றுக்கொன்று சங்கிலித் தொடர்போல, ஓரிடத்தில் நடக்கும் விபத்து நாட்டினை எவ்வாறு உருக்குவலைக்கிறது என்று தெள்ளத் தெளிய எடுத்துரைக்கிறது. -

அதனால்தான், இக் கருத்துக்களை பொதுமக்கள் உணர்வதைவிட, பள்ளி மாணவர்கள் பெரிதும் உணர்ந்து பின்பற்ற வேண்டும் என்று, நாட்டுப் பற்றுள்ள நல்லவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். அதற்கும் காரணங்கள் உண்டு.

1. மாணவர்கள் தங்கள் உடலை, நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்கின்றார்கள்.

2. எதிர்காலத்தைச் சிறந்த முறையில் உருவாக்கிக் கொள் கின்றார்கள்.

3. பொறுப்பான மன வளர்ச்சியைப் பெறுகின்றார்கள்.

4. பிறருக்கு உதவுகின்ற நல்ல பண்பினில் திளைக்கின்றார்கள்.

5. விபத்துக்களிலிருந்து விலகிக் கொண்டாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் விபத்துக்குள்ளா னாலும், ஏற்கனவே அதைப்பற்றி நன்கு அறிந்து கொண்டிருப் பதால், அதற்காக அனாவசியமாக அச்சப்படாமலும், அதே நேரத்தில் பிறரையும் அஞ்சாமல் இருக்கத் தைரியம் கூறுகின்ற தைரியத்தைப் பெறுகின்றார்கள்.

6. ஒழுங்குமுறையைப் பின்பற்றும்போது நேர்கின்ற உண்மையான இன் பத்தின் பயனை நேரில் அனுபவித்து மகிழ்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/189&oldid=691002" இலிருந்து மீள்விக்கப்பட்டது