பக்கம்:நலமே நமது பலம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 193

(உ) பச்சை விளக்கு தெரிந்த பின்னர், போகலாம் என்று முடிவு செய்த பின்னர் உறுதியுடன் முன்னேற வேண்டும். நடுசாலை வரை சென்ற பிறகு அங்கேயே நின்று கொண்டு முன்னே போவதா அல்லது பின்னால் இருந்த இடத்துக்கே வருவதா என்று குழப்பத்துடன் முடிவு செய்யக்கூடாது. வந்தால் முன்புறமாகக் கடந்து செல்லத்தான் வேண்டும்.

(ஊ) சாலையின் குறுக்கே நடக்கத்தான் வேண்டும் என்றால் குடுகுடுவென்று அவசரப்பட்டு ஓடக்கூடாது.

(எ) சாலையைக் கடக்கும்போது குறுகிய நேரத்திற்குள் கடந்து செல்கின்ற முறையில்தான், அதாவது நேருக்கு நேராகத்தான் நடக்க (Short Root) வேண்டும். மூலைக்கு மூலை என்பது போல (ஆற்று வெள்ளத்தில் நீந்தும் ஒருவர் ஒரு பக்கம் குதித்து நேரே போக முடியாமல் வெள்ளத்தோடே போய் அதிக தூரம் சென்று எதிர்க்கரையை அடைவதுபோல) சரிந்து போய்க் கடக்கக்கூடாது.

(ஏ) சாலையைக் கடக்கும்போது வேறு எந்த யோசனையோ கற்பனையோ கவலையோ இருக்கக்கூடாது. சாலையைக் கடக்கிறோம், கடந்து கொண்டிருக்கிறோம் என்கிற ஒரே நினைவுதான் நினைவில் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

(ஐ) எனக்கு சாலையில் நடக்க உரிமை உண்டு. இது பொதுச் சொத்து தானே என்று உரிமை பாராட்டி, பெருமையாகப் பேசிக் கொண்டு செல்லக்கூடாது. வாகனம் ஒட்டுவோருக்கும் இதே உரிமை நினைவு வந்து, அவருடன் நீங்கள் மோதிக் கொண்டால், உங்கள் கதி என்ன ஆகும்?

(ஒ) பொது இடங்களில் முன் உணர்வும் பொது அறிவும் உள்ளவாறு நடந்து கொள்ளும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/195&oldid=691009" இலிருந்து மீள்விக்கப்பட்டது