பக்கம்:நலமே நமது பலம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

மேற்கூறிய கருத்துக்கள் சாலையைக் கடக்கும்போது, மிகவும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டிய

விதிகளாகும்.

இனி, சாலையில் சைக்கிளில் செல்லுவோர் கடைப் பிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் காண்போம்.

3. சைக்கிளில் செல்வோர் கவனிக்க வேண்டியவை:

1. தனது சைக்கிளில் பிரேக், பெடல், மணி, சக்கரங்கள் உட்பட சரியான நிலையில் இருக்கும் படி மிகவும் நல்ல முறையில், யாராயிருந்தாலும் வைத்திருக்க வேண்டும்.

2. சாலைகளில் சைக்கிள் வெல்லுதற்குரிய ஒட்டப் பாதையில்தான், ஒட்டிச் செல்ல வேண்டும். அவ்வாறு ஓட்டத்திற்கென்று தனிப்பாதை இல்லாத இடங்களில் நடுரோட்டில் செல்லாமலும் மிகவும் ஓரமாகவும் ஒதுங்கிப் போய் விடாமலும் அனுசரித்துத்தான் செல்ல வேண்டும்.

3. சாலைகளுக்கு உரித்தான விதிகள், சைகை முறைகள் போன்ற அத்தனையையும் சைக்கிள் ஒட்டுவோரும் கடைப்பிடிக்க வேண்டும்.

4. அதிக நெருக்கமாக வரும் வாகனங்களுக்கிடையே ஒட்டுவதற்கு முயலக்கூடாது.

5. சைக் கிளில் முன்னாலோ அல்லது பின்னாலோ

ஒருவர் அல்லது இருவரை ஏற்றிச் செல்வது தவறு. அது அபாயகரமான சூழ்நிலையை உண்டாக்கும்.

6. ஒரு கையையோ அல்லது இரு கைகளையோ சைக்கிள் ஒட்டும் பிடிப்பிலிருந்து விட்டுவிட்டு, ஆக எவ்வளவு எழிலாக ஒட்டுகிறார் என்று எல்லோரும் தன்னைப் புகழ்வார்கள் என்ற நினைப்புடன் ஓட்ட முயலக்கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/196&oldid=691010" இலிருந்து மீள்விக்கப்பட்டது