பக்கம்:நலமே நமது பலம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 2O5

சமைக்கும்போது சேலையில் தீப்பற்றுவது மிகவும் இயல்பாக நடக்கக்கூடிய விபத்தாக இன்றைய வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது.

1. ஸ்டவ் எரிந்து கொண்டு இருக்கும்போது அதற்குள் மண்ணெண்ணெய் ஊற்ற முயலுகையில் ஸ்டவ் கவிழ்ந்து தீப்பற்றிக் கொள்வது.

2. ஸ்டவ்வுக்குக் காற்றடிக்கும்போது கை தவறி ஸ்டவ் கவிழ்ந்து தீப்பிடித்துக் கொள்வது. -

3. குழந்தைகள் தீப்பெட்டியை எடுத்து வைத்துக் கொளுத்திக் கொண்டு விளையாடுவது.

4. படுக்கையில் படுத்துக் கொண்டே புகை பிடித்துக் கொண்டு அப்படியே தூங்கிப் போய் விடுவது.

5. தீக்குச்சிகள் மற்றும் அடுப்பெரிக்கும் விறகுக் கொள்ளியை அணைக்காமல் அப்படியே விட்டு விடுதல்.

6. கேஸ் அடுப்பு வைத்திருப்பவர்கள், அதற்குப் பக்கத்தில் கேஸ் இருக்கும் ஜன்டியை வைத்திருத்தல். அது பழுதுபட்டு இருந்தால் எளிதில் தீப்பற்ற வாய்ப்பு உண்டு.

7. பட்டாசு கொளுத்தி மகிழும் நேரங்களில் அஜாக் கிரதையினால் தீக்காயம் படுதல்.

8. அடுப்பில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்கும் போது, அதன் மீது தண்ணிர் படுதல். அல்லது கொதிகலம் கவிழ்ந்து மேலே விழுதல்.

9. சோறு வெந்து கஞ்சிவடிக்கும்போது பானை கவிழ்ந்து மேலே ஊற்றி விடுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/207&oldid=691022" இலிருந்து மீள்விக்கப்பட்டது