பக்கம்:நலமே நமது பலம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தொற்று நோய்க் கிருமிகள் உடலின் தோல் வழியாகவும், மூக்கு, வாய் மூலமாகவும் உள்ளே நுழைந்து விடும் ஆற்றலுடையதாகும்.

நோய்க் கிருமிகள் எல்லாமே நுண் கிருமிகளாகும். கண்ணால் காண முடியாததாகும். இவைகளில் சில புரோட்டாசா (Protozoa), பேக்டீரியா (Bacteria), வைரசஸ் (Viruses), புழுக்கள் (Worms), போன்ற கிருமிகள் பொல்லாதவைகளாகும்.

606Guaso Gadoch (Infections Diseases):

ஒட்டிக் கொள்ளும் ஆற்றல் கொண்டிருப்பதால், பெருவாரியாக எல்லோருக்கும் பரவும் தன்மை உடையதால் இவற்றைப் பெருவாரி நோய் என்று தமிழ்ப்படுத்தியிருக் கிறோம்.

ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைத் தாக்கி நோய்ப்படுத்தும் கொள்ளை நோய்கள் -

கொடுமையான நோய்கள் என்று கூட நாம் கூறலாம்.

இவை ஏன் இப்படி மின்னல் வேகத்தில் பரவுகின்றன என்பதற்கான காரணத்தை இன்னும் கண்டறிய முயல் கின்றார்கள். - -

நோய்க் கிருமிகள் ஒருவர் உடலிலிருந்து மற்றவர் உடலுக்குள் பரவிக் கொள்கின்றன. அவை உடலில் நச்சுத் தன்மையை உண்டாக்கிவிடுகின்றன. அவையே நோய்களை உருவாக்கி விடுகின்றன. -

நம்முடைய உடலில் ஏற்கனவே இருக்கும் தற்காப்பு வலிமை, இந்த நச்சுப் பரவலின் காரணமாக வலிமை இழந்து போகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/34&oldid=693183" இலிருந்து மீள்விக்கப்பட்டது