பக்கம்:நலமே நமது பலம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 89

B12 என்னும் சத்து, மிருகங்களின் ஈரல்களிலிருந்து நிறையக் கிடைக்கிறது. நல்ல ஜீரண சக்திக்கும் நரம்பு வலிமைக்கும் இரத்தச் செழுமைக்கும் இது உதவுகிறது.

மேற்கூறிய எல்லா வைட்டமின்களும் ஒன்று சேர்ந்து பி காம்பளக்ஸ் என்ற பெயருடன் திகழ்கிறது. நல்ல உடல் வளர்ச்சிக்கும் நல்ல உடல்நலப் பெருக்கத்திற்கும் இச்சத்து உதவி செய்கிறது. வைட்டமின் C:

இதுவும் தண்ணிரில் கரைகிற வைட்டமின் சத்தாகும். புத்தம் புதிய பழங்களில், தக்காளி, ஆரஞ்சு, எலுமிச்சம் பழம், திராட்சை, பயிறு, பட்டாணி வகைகளிலும் நிறையக் கிடைக்கிறது.

வெப்பத்தினால் இச்சத்து குறைந்து போகிறது என்பதால்தான், ஊறுகாய்கள் போட்டு அதன் மூலம் வைட்டமின் C சத்து வீணாகாமல் காக்கப்படுகிறது. அதனால்தான் உணவிலே ஊறுகாய் சேர்த்துக் கொண்டு உண்பது நல்ல பழக்கம் என்பார்கள் பெரியவர்கள். -

உணவிலே வைட்டமின் C சத்து குறைகிறபோது, எல் கர்வி என்ற நோய் உண்டாகிறது. இந்த நோய் ஏற்படுகிறபோது இரத்தக் குழாயின் சிறு தந்துகிகள் நலிவடைந்து போகின்றன. அதனால் பல் ஈறுகளில் இரத்தக் கசிவு போன்றவை ஏற்படுகிறது.

நோய்தடுக்கும் சக்தியையும் உடல் இழந்து போகிறது. இந்தக் காரணத்தினால் செப்டி சிமியா என்ற நோய் ஏற்பட்டு நோயாளிகள் சீக்கிரமாக இறந்து போகிறார்கள்.

உடலில் ஏற்படுகின்ற காயங்களைப் போக்கவும், இரத்தத்தில் சிவப்பு அணுக்களை வலிமையாகப் படைக்கவும், நோய்கள் வராமல் தடுக்கவும் கூடிய சக்தியினை வைட்டமின் C வழங்கிக் காப்பாற்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/91&oldid=694986" இலிருந்து மீள்விக்கப்பட்டது