பக்கம்:நலமே நமது பலம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

துணைவியும் கூட வருவதாகக் கேட்கவே சம்மதித்து டிரைவர் வண்டியை ஒட்ட, மகிழ்ச்சியுடன் புறப்பட்டேன்.

தஞ்சாவூரில் ஒரு வாரம், திருச்சியில் ஒரு வாரம் சுற்றுப் பயணம் என்று திட்டமிட்டுக் கொண்டு, யார் யாரை யெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதாக முன்கூட்டியே தெரிவித்து விட்டு, கடிதம் எழுதி நாள் நேரத்தையும் குறித்துக் கூறிவிட்டுத்தான் புறப்பட்டேன்.

பண்ருட்டி வழியாக நெய்வேலியைக் கடந்து போவதுதான் வழி. பண்ருட்டிக்கு முன்னதாக, கூடவே வந்த கட்டு சோற்றை வண்டியிலேயே இருந்து சாப்பிடும்போது பிற்பகல் மணி 2.

மதிய உணவுக்குப் பிறகு, சற்றுக் கண்ணயர்வது எனக்குப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிற பழக்கம். நானும் அந்த நிலையில் இருந்தபோது, பண்ருட்டியைக் கடந்து வேன் போய்க் கொண்டிருந்தது.

டிரைவர் என்னை அழைப்பது போல் கேட்டது. திடுக்கிட்டு விழித்தேன். சார்! நீங்கள் வண்டி ஓட்ட வேண்டும் என்றீர்களே! சாலையில் வண்டிகள் அதிக மில்லை. பிரியாக இருக்கிறது. வந்து ஒட்டிப் பாருங்கள் என்று அழைத்தான்.

பிறகு பார்க்கலாம் என்று நான் மறுத்ததைக் கேட்காமல் வற்புறுத்தினான். வண்டியை நிறுத்திவிட்டுப் பல நிமிடங் களாகப் பேசிவிட்டு முன்புறமாக இருந்து டிரைவர் இருக்கையை விட்டு எழுந்து கொள்ள, வேறு வழியில்லாமல் நான், டிரைவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு ஒட்ட ஆரம்பித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/96&oldid=694995" இலிருந்து மீள்விக்கப்பட்டது