பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

யும் சமமாய் அரைத்து உடம்பில் தேய்த்துக் குளிக்கச் சிரங்கு தீரும்.

சிரங்கிற்குக் களிம்பு

கந்தகம், துருசு, குங்கிலியம் இவைகளை ஓர் கிறை. யாக விளக்கெண்ணெயில் அரைத்துச் சிரங்குப் புண் னில் போட அது தீரும்.

அண்டவாதத்திற்கு

வெள்ளைப் பூண்டையும் கருஞ்சீரகத்தையும் தேனில் அரைத்து காலை மாலை இரண்டு வேளை உட்கொள்ள வேண்டியது. இப்படி ஒரு வாரம் கொண்டால் அண்ட வாதம் தீரும். பத்தியமாக இருக்க வேண்டும்.

பேதிக்கு

காற்படி மோரில் ஒரு தேக்கரண்டி ஆமணக் கெண்ணெய் கலக்கி அதிகாலையில் குடிக்கவும். கன்ருய்ப் பேதியாகும்.

பேதி அதிகமாக இருப்பின் வசம்பைக் கரிக்கி வெந்நீர் அல்லது கஞ்சித் தண்ணீரில் போட்டுக் கலக்கிக் குடிக்கவும்.

நீரிழிவிற்கு

நல்ல சுத்தமான எள் ஆறு அவுன்ஸ் எடுத்து அதில் பனவெல்லத்தைச் சேர்த்து இடித்துக் காலையிலும் மாலை யிலும் நெல்லிக்காயளவு உட்கொள்ளவும். பத்தியமாக இருக்க வேண்டும்.