பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


இவற்றின் இயல்புகள்
வாதம்   - வாய்வு
           புளிப்பு 
           குளிர்ச்சி 
நிறம்    - கருநீலம் 
பித்தம்  - வன்னி
           கசப்பு 
           வெறுப்பு 
நிறம்    - பசும் பச்சை 
அய்யம்  - அப்பு
            தித்திப்பு
            வியர்வை 
நிறம்     - வெண்மை

வாதம் எழும்பிடில் இனிப்பு காவில் ஏறும். பித்தம் எழும்பிடில் கசப்பு நாவில் ஏறும். சிலேட்டுமம் எழும்பிடில் இனிப்பு நாவில் ஏறும்.

வாத பித்த சிலேட்டும காலம்

காலேயில் வாத நாடி கடிகையிற் பத்ததாகும் பாலையாம் பித்தநாடி பகருச்சி பத்ததாகும் மாலையாம் சேத்மநாடி மதிப்புடன் பத்ததாகும் வாலையா மனோன்மணிக்கு வகுத்துமே தொகுத்ததாகும்.

உதயத்தில் 10 கடிகை வரை வாதம்,
உச்சியில் 10 கடிகை வரை பித்தம்,
மாலையில் 10 கடிகை வரை சிலேட்டுமம் நடக்கும்.

மனிதர்களுக்கு வயது 120 என்று எடுத்துக்கொண்டால் முதல் 40 வயது வரை வாத காலம்.